நகங்கள் இப்படி நீளமாக வளர வேண்டுமா? இதில் ஒன்றை ஃபாலோ பண்ணுங்க

Report Print Kavitha in அழகு

எல்லா பெண்களுக்கும் நகங்கள் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. இருப்பினும் ஏதாவது ஒரு சில காரணங்களால் நகங்கள் உடைந்து விடுகின்றது.

அதுமட்டுமின்றி நகம் உடைவது, நகத்தில் விரிசல் உண்டாவது ஆகியவை அனைத்தும் அவற்றின் பராமரிப்பு குறைபாட்டால் உண்டாகும் தொந்தரவாகும். இதனால் பெரிதும் அவஸ்தைப்படுவதுண்டு.

இந்த பிரச்சினையிலிருந்து விடுபடவும் நகங்கள் விரைவாகவும் நீளமாகவும் வளர்வும் இங்கு எளிய சில எளிய வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. தற்போது அவற்றை பார்ப்போம்.

டிப்ஸ் 1

அரை கப் எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்ளவும். தண்ணீரை லேசாக சூடாக்கி, அதில் எலுமிச்சை சாற்றை கலக்கவும். இந்த எலுமிச்சை கலந்த நீரில் உங்கள் விரல் நகங்களை 10-15 நிமிடங்கள் ஊற விடுங்கள். ஒரு வாரத்தில் மூன்று முறை இப்படி செய்வதால் உங்கள் நகம் வலிமையாவதை உங்களால் உணர முடியும்.

டிப்ஸ் 2

அரை கப் தேங்காய் எண்ணெயுடன் 1/4 கப் தேன் மற்றும் நான்கு துளிகள் ரோஸ்மேரி அத்தியாவசிய எண்ணெய் ஆகியவற்றை சேர்ந்து ஒன்றாகக் கலந்து சூடாக்கவும். இந்த கலவையில் உங்கள் விரல் நகங்களை 15 நிமிடம் ஊற விடவும். தினமும் இப்படி செய்வதால் உங்கள் விரல் நகம் வேகமாக வளரும்.

டிப்ஸ் 3

3 ஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும். இந்த கலவையில் உங்கள் விரல் நகங்களை ஊற விடவும். ஒரு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இதனை செய்யலாம்.

டிப்ஸ் 4

முட்டை ஓடுகள், ஆளி விதைகள் மற்றும் பாதாம். முட்டை ஓடுகளைத் தூளாக்கிக் கொள்ளவும். பாதாம் மற்றும் ஆளி விதைகளையும் தூளாக்கிக் ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும். வெதுவெதுப்பான பாலில் இந்த தூளை சேர்த்து உங்கள் நகங்களில் தடவவும். சில நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள். ஒரு மாதம் தொடர்ந்து தினமும் காலையில் இந்த முறையை பின்பற்றுங்கள். உங்கள் நகங்கள் நீளமாகவும் வலிமையாகவும் வளர்வதை உங்களால் பார்க்க முடியும்.

டிப்ஸ் 5

ஆரஞ்சு சாற்றில் உங்கள் விரல் நகங்களை 15-20 நிமிடங்கள் ஊற விடவும்.பிறகு வெதுவெதுப்பான நீரில் நகங்களைக் கழுவவும். நகங்கள் நன்கு காய்ந்தவுடன் மாயச்ச்சரைசெர் பயன்படுத்தவும். ஒரு வாரத்தில் மூன்று முறை இதனைச் செய்யலாம்.

டிப்ஸ் 6

காய்ந்த ஹார்ஸ் டெயில் 3/4 ஸ்பூன் எடுத்து கொதிக்கும் நீரில் ஒரு நிமிடம் போடவும். ஹார்ஸ் டெயில் மூலிகை நீரில் நன்றாக கொதிக்கும்படி 5 நிமிடங்கள் வைக்கவும். பிறகு அந்த மூலிகையை வட்டிகட்டி, நீரை ஆற விடவும். இந்த நீரில் உங்கள் விரல் நகங்களை 20 நிமிடம் ஊற விடவும். ஒரு வாரத்தில் மூன்று நாட்கள் என்று ஒரு மாதம் தொடர்ந்து இதனைப் பின்பற்றி வரலாம்.

டிப்ஸ் 7

ஆளி விதை எண்ணெய்யை மிதமாக சூடாக்கவும். 5-7 நிமிடங்கள் வரை உங்கள் நகங்களை அந்த எண்ணெயில் ஊற விடவும். இரவு முழுவதும் கைகளுக்கு க்ளௌஸ் அணிந்து கொள்ளவும். இதனால் இந்த எண்ணெய்யை உங்கள் நகங்கள் உறிஞ்சிக் கொள்ள இயலும். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இதனைச் செய்யலாம்.

டிப்ஸ் 8

தக்காளி சாறு ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். நான்கு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் எடுத்துக் கொள்ளவும். இரண்டு பொருட்களையும் லேசாக சூடாக்கிக் கொள்ளவும். அந்தக் கலவையில் உங்கள் நகங்களை 10 நிமிடங்கள் ஊற விடவும்.

டிப்ஸ் 9

தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளி துண்டை நகங்களில் சில நிமிடம் தொடர்ந்து தேய்க்கவும். பிறகு வெதுவெதுப்பான நீரால் கழுவவும். இந்த முறையை தினமும் பின்பற்றுவதால் உங்கள் நகங்கள் வேகமாகவும் வலிமையாகவும் வளரும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்