தினமும் 5 நிமிடம் இதை முகத்தில் தடவுங்க.. அதிசயம் நடக்குமாம்!

Report Print Kavitha in அழகு

முகப்பரு வந்தாலே அதனுடன் சோர்ந்து தழும்புகளும் வந்து நம்முடைய முகத்தையே அசிங்கமாக்கிவிடுகின்றது.

இதற்காக நாம் கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட மருந்துகளையும் கிறீம்களையும் வாங்கி பூசுவதுண்டு.

சருமத்திற்கு பராமரிப்பு கொடுக்கும் போது, அது கெமிக்கல் கலந்த பொருட்களாக இருந்தால், சருமத்தில் பிரச்சனைகள் மேலும் அதிகரிக்கத் தான் செய்யும்.

இதனால் முகப்பரு அதிகரிக்குமாயின் குறைவடையாது. இதற்கு இயற்கை பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரித்து வந்தால் தான், முகப்பரு, கரும்புள்ளிகள், கருமையான தழும்புகள் போன்றவற்றை போக்க முடியும். அது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • பேக்கிங் சோடா - சிறிது
  • ஆப்பிள் சீடர் வினிகர் - 1 டீஸ்பூன்
  • தேன் - சிறிது
  • எலுமிச்சை - 1/2

தயாரிக்கும் முறை

முதலில் ஒரு டம்ளரில் பாதி நீரை நிரப்பி, அதில் 1 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

மற்றொரு பௌலில் பேக்கிங் சோடா போட்டு, அத்துடன் கலந்து வைத்துள்ள வினிகர் நீர் சிறிது மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் செய்து, அதோடு எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

முதலில் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவிக் கொள்ள வேண்டும். பின் சுத்தமான துணியால் முகத்தைத் துடைக்க வேண்டும்.

பின்பு தயாரித்து வைத்துள்ள மாஸ்க்கை முகத்தில் தடவி, 5-10 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரால் கழுவி, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

இந்த மாஸ்க்கை போடுவதன் மூலம், சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் முழுமையாக நீக்கப்பட்டு, முகப்பருக்கள் மற்றும் கருமையான தழும்புகள் நீங்கி, முகம் புத்துணர்ச்சியுடனும், பொலிவோடும் இருக்கும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers