கைகள் கருமையாக இருக்கா? இதில் ஒன்றை யூஸ் பண்ணுங்க

Report Print Kavitha in அழகு

பொதுவாக சில பெண்களுக்கு முகம் வெள்ளையாக காணப்படும். ஆனால் கைகள் கால்கள் கருமையாக இருக்கும்.

இதற்கு காரணம் முகத்தை விட கைகள் எளிதில் சூரியக் கதிர்களால் பாதிக்கும். காரணம் அங்கே கொழுப்புகள் மிக குறைவு.

அதனால் தோல் மிருதுவாக இருக்கும். எளிதில் சூரியக் கதிர்கள் ஊடுருவும். ஆகவே எளிதில் கருமை ஆகிவிடும்.

இதற்காக கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட கிறீம்கள் மற்றும் லோஷன்களை வாங்கி உபயோகிக்கமல் வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டே அழகுப்படுத்த முடியும். தற்போது கீழ் குறிப்பிடப்பட்டுள்ள சில டிப்ஸ்களில் ஒன்றை உபயோகித்தலே போதும்.

எலுமிச்சை சாறு மற்றும் உப்பு

ஒரு கிண்ணத்தில் எலுமிச்சை சாற்றினை எடுத்துக் கொண்டு அதில் கல் உப்பு சிறிதினை சேர்த்து கரையும் வரை கலக்குங்கள்.

பின் அதனை கைகளில் தடவி, நன்றாக நீவி விடுங்கள். 15 நிமிடங்கள் கழித்து, கழுவலாம். இரண்டுமே இயற்கையான ப்ளீச் ஆகும்.

அழுக்குகளை சுத்தமாக களைந்து, சருமத்தின் நிறத்தினை மாற்றும். சருமம் மிருதுவாகும்.

கடலை மாவு பேக்

கடலை மாவு 2 டேபிள் ஸ்பூன்,மஞ்சள் ஒரு சிட்டிகை,பால் அரை கப் இந்த மூன்றையும் கலந்து கைகளைல் தேய்க்கவும். நன்றாக காய்ந்தபின் கழுவுங்கள்.

வாரத்தில் மூன்று நாட்கள் செய்தால், கருமை மாறி கைகள் அழகாகிவிடும். காரணம், கடலை மாவு, இயற்கையான ஸ்க்ரப்பகவும், ப்ளீச்சாகவும் செயல்படுகிறது.

பப்பாளி மற்றும் தேன் பேக்

பப்பாளியை நன்றாக மசித்து, அதனுடன் தேன் சேர்க்கவும். இப்போது கைகளில் தடவி மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்து கழுவலாம்.

தேன் சிறந்த மாய்ஸ்ரைசர். பப்பாளி நிறம் அளிக்கிறது. இறந்த செல்களை அகற்றி, கருமையைம் போக்கச் செய்யும்.

ஆரஞ்சு தோல் பேக்

ஆரஞ்சு தோலை காயவைத்து பொடி செய்து கொள்ளுங்கள். தேவையான பொடி எடுத்துக் கொண்டு, அதில் பாலினை கலந்து கைகளில் தடவுங்கள்.

நன்றாக காய்ந்ததும் கழுவிவிடவும். சருமம் நிறம் கூடி பொலிவை தரும்.

பாதாமை இரவில் ஊற வைத்து மறு நாள் அதன் தோலை உரித்து, அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். பாதாம் பேஸ்ட்டில் சிறிது சந்தன எண்ணெய் கலந்து கைகளில் தடவுங்கள். இது கருமையை அகற்றி பொலிவை தரும்.

உருளைக் கிழகு சாறு

உருளைக் கிழங்கின் தோலை அகற்றி,அரைத்து, அதிலிருந்து சாற்றினை எடுத்துக் கொள்ளுங்கள்.

பிறகு அதனை கைகளில் பூசி, காய்ந்ததும் கழுவிவிடுங்கள். நாளடைவில் கருமை இருந்த இடமே தெரியாமல், சருமம் ஒரே நிறத்தைப் பெறும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்