முடி நீளமா வளரனுமா?அப்போ மிளகாயை இப்படி யூஸ் பண்ணுங்க

Report Print Kavitha in அழகு

இன்றைய பெண்கள் முகத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு நிகராக தங்கள் தலைமுடிக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள்.

அந்தவகையில் தலைமுடி உதிர்வு என்பது பெண்களுக்கு பெரும் இழப்பாக காணப்படுகின்றது.

தலைமுடி உதிர்வதற்கு முக்கிய காரணமே சுற்றுச்சூழல் மாசு, வாழ்க்கை முறை, ஹார்மோன் சமநிலையின்மை போன்றவை காரணமாக அமைகிறது. இதனால் கூந்தல் உதிர்வு மட்டுமில்லாமல் பொடுகு, கூந்தல் உடைந்து போவது, பிளவுபட்ட கூந்தல் நுனிகள் போன்ற பிரச்சினைகளும் சேர்ந்தே வருகிறது.

இந்த கூந்தல் உதிர்தல் பிரச்சினையை போக்க ஏராளமான சாம்பு, க்ரீம்கள் என்று மார்க்கெட்டில் கிடைக்கும் கண்ட கண்ட பொருட்களை உபயோகிக்கமால் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே தலைமுடி உதிர்வை போக்க முடியும்.

இதற்கு சிறந்த பொருளாக கெயான் மிளகாய் பயன்படுகின்றது. இந்த மிளகாயில் உள்ள கேப்சைன் என்ற பொருள் கூந்தல் வளர்ச்சியை தூண்டுகிறது. மேலும் கூந்தலுக்கு பளபளப்பும், மென்மையையும் தருகிறது.

தற்போது கெயான் மிளகாயை வைத்து முடி உதிர்வை தடுத்து முடி நீளமாக வளர என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • 1 கப் ஆலிவ் ஆயில்
  • 5-6 மிளகாய்

பயன்படுத்தும் முறை

முதலில் மிளகாயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். இந்த மிளகாயை ஆலிவ் ஆயிலில் சேர்த்து ஒரு பாட்டிலில் அடைத்து 10-15 நாட்கள் குளிர்ந்த இடத்தில் வைத்து விடுங்கள்.

சில நாட்கள் கழித்து எண்ணெய் மட்டும் வடிகட்டி மிளகாயை தனியாக எடுத்து விடுங்கள்

இந்த எண்ணெய்யை உங்கள் கூந்தல் மற்றும் மயிர்க்கால்களில் தடவி ஒரு மணி ஊற வைக்க வேண்டும்.

பிறகு மைல்டு சாம்பு கொண்டு அலசவும். இதை வாரத்திற்கு 3 முறை என செய்து வந்தால் கூந்தல் வளர்ச்சி ஏற்படுவதை கண் கூடாக பார்க்கலாம்.


மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers