நக சுத்தி வந்து பாடாபடுத்துதா? மருதாணியை இப்படி யூஸ் பண்ணுங்க

Report Print Kavitha in அழகு

இன்றைய காலக்கட்ட பூஞ்சை அல்லது பாக்டீரியாவால் நகம் பாதிக்கப்பட்டு நகச்சுத்தியால் அவதிப்பட்டிருப்போம்.

இதற்கு முக்கிய காரணம் பிளீச்சிங் கலந்த பொருட்களே ஆகும்.

சிலருக்கு பிளீச்சிங் ஒத்து கொள்ளாமல் கை விரல்களில் நகங்கள் அழுகிவிடும். இதன் பின் விளைவுகள், பல வியாதிகளை உண்டாக்கும்.

நம் முன்னோர்கள் நகச்சுத்தி வந்தாலே புளி, உப்பு எலுமிச்சை பழத்தை கை விரலின் மேல் தொப்பி போல் வைப்பார்கள்.

நக சுத்தியைக் குணப்படுத்த பல மருந்துகள் கிடைக்கின்றன. ஆனால் அவை பெரும்பாலும் பக்க விளைவுகளையே ஏற்படுத்தும். தற்போது நகச்சுத்தியை மருதாணியை கொண்டு எப்படி சரி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • மருதாணி பவுடர் - ஒரு தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
  • கிராம்பு - நான்கு
  • கடுகு எண்ணை - ஒரு தேக்கரண்டி
  • நீலகிரி தைலம் - ஒரு தேக்கரண்டி
  • எலுமிச்சை சாறு - ஒரு தேக்கரண்டி
  • டீ தூள் - ஒரு தேக்கரண்டி
  • தண்ணீர் - முக்கால் கப்
  • ச‌ர்க்க‌ரை - அரை தேக்க‌ர‌ண்டி

செய்முறை

த‌ண்ணீரை கொதிக்க‌ வைத்து அதில் டீ தூளை போட்டு ந‌ன்கு கொதிக்க‌விட்டு சர்க்கரை சேர்த்து கலக்கி வ‌டி க‌ட்ட‌வும்.

ம‌ருதாணியில் , ம‌ஞ்ச‌ள் தூள் சேர்க்க‌வும், கிராம்பை பொடி செய்து சேர்க்க‌வும், எலுமிச்சையை சாறெடுத்து ஊற்றி க‌ல‌க்க‌வும்.

இதில் வ‌டிக‌ட்டிய‌ டீ டிகாச‌னை தேவைக்கு க‌ல‌ந்து கொள்ள‌வும்.

க‌டை‌சியாக‌ கடுகு எண்ணை, நீல‌கிரி தைல‌ம் சேர்த்து க‌ல‌ந்து சிறிது நேர‌ம் ஊற‌வைத்து ஆறிய‌தும் அதை கையில் உள்ள‌ ந‌க‌த்துக்கு தொப்பி போல் வைக்க‌வும்.

இது தொட‌ர்ந்து முன்று நாட்க‌ள் வைக்க‌வும், முத‌ல் நாள் வைக்கும் போதே வ‌லி எல்லாம் குறைந்து விடும்.

மேலும் கைகளையும் அழகாக்கி வலியையும் போக்கிடும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers