இளமையை மீட்டு தரும் ட்ராகன் பழம்! இப்படி யூஸ் பண்ணி பாருங்க அதிசயம் நடக்கும்

Report Print Kavitha in அழகு

பெண்களாக பிறந்த அனைவருக்கும் நீண்ட நாட்கள் இளமையாக இருக்க வேண்டும் என்பதே பேராசையாக இருக்கும்.

இதற்காக நாம் பல்வேறு வழிகளில் இன்றும் நாம் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கின்றோம்.

இதனை நிறைவேற்ற ஒரு அருமையான தீர்வு இருக்கிறது.

இயற்கையாக இறைவன் தந்த கொடைகளில் ஒன்று தான் ஒரு சில பழங்கள். இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரும் உதவியாக இருக்கின்றது, அதிலும் ஒரு சில பழங்கள் முக அழகை கூட்டும். அந்த வகையில் ஒரு அரிய வகை பழம் தான் ட்ராகன் பழம்.

இந்த பழத்தில் உள்ள சத்துக்கள் தான் முக அழகிற்கும், முடி வளர்ச்சி, பற்கள் வெண்மை என்பவற்றுக்கு பெரிதும் உதவுகிறது.

முகத்தை பொலிவு பெற வைக்க ட்ராகன் பழம் நன்கு உதவுகிறது. இந்த பழம் முகத்தின் செல்களை சுறுசுறுப்பாகி பொலிவு பெற செய்யுமாம். இந்த பழத்தை ஜுஸ் போட்டு குடித்து வந்தாலே முகம் பளபளப்பாகும்.

இந்த பழம் ஒன்றை எடுத்து கொண்டு, தோலை நீக்கி நன்கு அரைத்து முடியின் அடி வேரில் தடவி வந்தால் முடி உறுதி பெறும். மேலும், முடி உதிரும் பிரச்சினையும் நின்று விடும்.

பற்கள் வெண்மையாக மாறும். அத்துடன் பற்கள் சார்ந்த கோளாறுகளும் குணமாகும். பற்கள் உறுதியாக இருக்க இந்த ட்ராகன் பழம் பயன்படும்.

ட்ரான் பழத்தை கொண்டு இளமையினை எவ்வாறு தக்க வைத்து கொள்ளலாம் என்று பார்ப்போம்.

தேவையானவை
  • யோகர்ட் 1 டேபிள்ஸ்பூன்
  • ட்ராகன் பழம் பாதி
செய்முறை

முதலில் ட்ராகன் பழத்தை நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.

பின்அடுத்து அவற்றுடன் யோகர்ட் சேர்த்து மறுபடியும் அரைத்து கொள்ளவும்.

இந்த பேஸ்டை முகத்தில் பூசி நன்கு மசாஜ் செய்யவும். பின் முகத்தை கழுவி விட வேண்டும்.

இந்த அழகு குறிப்பை வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால் நீங்கள் என்றும் 16 போல இளமையாக இருப்பீர்கள்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்