முகச் சுருக்கங்களை போக்கி என்றும் இளமையாக இருக்க

Report Print Jayapradha in அழகு

சருமத்தில் தளர்ச்சி தோன்றுவதற்கு முன் இளமையாக தோன்றும் நமது முகத்தின் அழகை தக்க வைக்க நாம் சில இயற்கை வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

முகத்தின் சதைகள் தளரும் போது சருமம் தொங்கி சுருக்கங்கள் தோன்றுகிறது. அத்தகைய சருமத்தின் தளர்ச்சி மற்றும் சுருகங்களைப் போக்குவதற்கான இயற்கை வழிகளைப் பற்றி பார்ப்போம்.

முட்டை மாஸ்க்

முகத்தின் தோலை இறுகச்செய்யும் ஒரு மிக சிறந்த மூலப்பொருள் முட்டையாகும். முதலில் ஒரு முட்டையை எடுத்து உடைத்து அதன் வெள்ளை கருவை மட்டும் எடுத்து முகத்தில் அப்படியே தடவவும்.

பின்பு நன்கு காய்ந்தவுடன் முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவவும். இப்படி செய்வதின் மூலம் சருமத்தில் உள்ள சுருக்கங்களை விரைவில் போக்க முடியும்.

முல்தானிமிட்டி மாஸ்க்

ஒரு முட்டையின் வெள்ளை கருவுடன் சிறிதளவு முல்தானிமிட்டி, க்ளிசரின் மற்றும் தேனை சேர்த்து ஒரு பேஸ்ட் போலாக்கி முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து முகத்தை நன்றாக கழுவவும்.

இவை முகத்தில் உள்ள கறைகளைப் போக்க உதவுகின்றன. எண்ணெய் சருமமாக இருந்தால் க்ளிசரின் பயன்படுத்த வேண்டாம். மேலும் வறண்ட சருமமாக இருந்தால் இதனை பயன்படுத்தக்கூடாது.

முட்டைகோஸ் மற்றும் அரிசி மாவு

முட்டைகோஸ் முதிர்ச்சியை தடுத்து சரும தளர்ச்சியை போக்கி இறுக்கத்தை கொடுக்கும்.

முட்டைகோஸை நன்கு அரைத்த பின் இதனுடன் அரிசி மாவு மற்றும் பாதாம் எண்ணெய்யை சேர்த்து முகத்தில் போட்டு பின் 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவுங்கள்.

வினிகர்

2 கப் தண்ணீருடன் 1 ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை கலக்கி இந்த திரவத்தை முகத்தில் போட்டு நன்றாக கழுவுங்கள்.இப்படி செய்வதினால் சருமத்தை பொலிவுடன் வைத்துக் கொள்ளலாம்.

மயோனீஸ் மாஸ்க்

மயோனீஸ் சரும பொலிவுக்கு ஒரு மிகச் சிறந்த தீர்வாகும். மேலும் இவை சருமம் சுத்தமாகவும் மென்மையாகவும் இருக்க உதவுகின்றன.

முட்டை மயோனிசை எடுத்து முகத்தில் எல்லா இடங்களிலும் சீரக தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். உங்கள் சப்பதை உங்களால் உணர முடியும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers