முகப்பரு பிரச்சனையா? இந்த உணவுகளை கட்டாயம் உண்ணுங்கள்!

Report Print Jayapradha in அழகு

இன்று பலரும் சந்திக்கும் மிக முக்கிய பிரச்சனைகளின் ஒன்று முகப்பரு.

மேலும் இதை தவிர்க்க பல மருந்து கிரீம்கள் மற்றும் தோல் பராமரிப்பு பொருட்களை உபயோகித்து வருகின்றனர்.

மேலும் முக்கப்பரு நாம் அன்றாடம் உண்ணும் உணவுகள் மூலமாகவும் ஏற்படுகின்றன. ஏனெனில் நாம் உண்ணும் ஆரோக்கியமான உணவு தோல் மேற்பரப்பில் மட்டுமே வேலை செய்கிறது. மேலும் இத்தகைய உணவுகள் உள் உடலில் இருந்து பல முகப்பரு பிரச்சினைகள் தோற்றுவிக்க உதவுகிறது.

முகத்தில் ஏற்படும் முகப்பரு பிரச்சனைக்கு உணவில் நீங்கள் சேர்க்க வேண்டிய சில ஆரோக்கியமான உணவு பொருட்களை பற்றி பார்ப்போம்.

பிரவுன் அரிசி

  • பிரவுன் அரிசியில் வைட்டமின் B, புரதம், மெக்னீசியம், மற்றும் பல ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. மேலும் அதில் உள்ள வைட்டமின் பி உடலில் உள்ள ஹார்மோன் அளவை கட்டுப்படுத்தி முகத்தில் தோன்றும் முகப்பரு குறைக்க உதவுகின்றன.

பூண்டு

  • பூண்டில் அசிசின் என்று அழைக்கப்படும் இயற்கையாக பொருள் உள்ளது. இது உடலில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் ஆகியவற்றைக் கொன்றுவிடவும் உதவுகின்றது.

  • பூண்டு முகப்பருவை சமாளிக்க ஒரு சூப்பர் ஃபுட் ஆக செயல்படுகிறது. மேலும் பூண்டை சிறு பகுதிகளாக வெட்டி அதை முகப்பருவில் தேய்த்தல் முகப்பரு விரைவில் மறையும்.
மீன்

  • பொதுவாக மீனில் ஒமேகா -3 மற்றும் ஒமேகா -6 கொழுப்பு அமிலங்கள் அதிகமான காணப்படுகின்றன.

  • மேலும் தினமும் மீன் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் வலிகளை குறைக்க உதவுகிறது. இதில் உள்ள அமிலங்கள் தோல் அழற்சி குறைக்கவும் மற்றும் முகத்தில் முகப்பரு வரமால் தடுக்கவும் உதவுகின்றது.

சத்தான உணவு

  • வைட்டமின் ஏ மற்றும் கரோட்டினாய்டுகளில் நிறைந்த உணவை உட்கொள்வதால் உடலில் அழற்சியற்ற தன்மை உண்டாகும்.

  • கேரட், கீரை, கேல், காய்கறி சூப், மாம்பழங்கள், பப்பாளி, ஓட்மீல், உறைந்த பட்டாணி மற்றும் தக்காளி பழச்சாறு ஆகியவை கரோட்டினாய்டுகளைக் கொண்ட பொருட்களை உட்கொள்ளலாம்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்