சருமத்தின் அழகு ஜொலிக்க சில குறிப்புகள் இதோ

Report Print Jayapradha in அழகு

சருமத்தை பாதுகாப்பதில் இயற்கையான மூலிகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இயற்கையான முறையில் சருமத்தில் உள்ள இறந்த செல்களை களைந்து புது பொலிவை பெற சில இயற்கை பொருட்களை பயன்படுத்தலாம்.

வேப்பிலை

முகத்தில் தோன்றும் வறட்சியை போக்கவும் மற்றும் வறண்ட சருமங்களை மிக்கவும் உதவுவது வேப்பிலை. வேப்பம் இலையை அரைத்து கிடைக்கும் வேப்பிலை பவுடர் கொஞ்சம் எடுத்து அதனுடன் திராட்சை சாறு கலந்து முகம் முழுவதும் பூசி பின்பு 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வறண்ட சருமம் பளபளப்புடன் திகழும்.

அதுபோல் முகப்பரு உள்ளவர்கள் வேப்பிலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை நனைத்து பரு மீது தடவி வர பருக்கள் காணாமல் போய்விடும்.

குங்குமம்ப்பூ

முக கருமை குறைந்து சிகப்பழகு பெற தேவையான அளவு பன்னீரில் குங்குமப்பூவை போட்டு நன்கு ஊற வைத்து அந்த தண்ணீரை முகத்தில் தடவி வர வேண்டும்

குங்குமப்பூவை பாலில் ஊற வைத்து பூசி வர கரும்புள்ளி காணாமல் போய் விடும். அதுபோல் குங்குமப்பூவை பாலில் ஊற வைத்து அதனுடன் கொஞ்சம் சந்தன தூளை கலந்து குழைத்து முகத்தில் பூசினால் முகம் பளபளப்புடன் திகழும்.

சந்தனம்

நன்கு அரைத்த சந்தன விழுதுடன் தேவையான அளவு பாதாம் பவுடரை கலந்து அதனுடன் பால் சேர்த்து முகம் மற்றும் கைப்பகுதிகளில் பூசினால் சருமம் பளிச்சென இருக்கும்.

தேன்

தேனில் ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட் மற்றும் குணப்படுத்தும் தன்மை கொண்டிருப்பதால் இது சரும பாதுகாப்பிற்கு ஒரு இயற்கையான மூலப்பொருள்

சருமத்தை இளமையாக வைக்கவும், சுருக்கங்கள் தோன்றுவதில் தாமதத்தை ஏற்படுத்துவம், இதனை வேறு சில பொருட்களோடு இணைத்து பயன்படுத்தும்போது நல்ல பலனை பெறலாம்.

தயிர்

தயிரில் இருக்கும் கொழகொழப்பான தன்மை சருமத்திற்கு ஈரப்பதத்தை கொடுக்கிறது. மேலும் சரும துளைகளில் ஏற்பட்ட அடைப்புகளை நீக்குகிறது. சருமத்தில் தோன்றும் புள்ளிகளை அழிக்கிறது.

பப்பாளி

பப்பாளியில் வைட்டமின் ஏ , வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ அதிகமாக உள்ளதால், நுண் கிருமிகளை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது.

பப்பாளியில் இருக்கும் பப்பைன் என்னும் என்சைம் தோல் உரிதலுக்கான செயல்பாட்டிலும் மற்றும் சோர்ந்த மற்றும் எண்ணெய் பசையுடைய சருமத்திற்கு ஏற்றது. வயது முதிர்வின் காரணமாக தோன்றும் கோடுகள், சுருக்கங்கள் , போன்றவை பப்பாளியால் குறைக்கப்படுகின்றன.

பூசணிக்காய்

பூசணிக்காய் வைட்மன் சி . ஏ ஈ மற்றும் பீட்டா கரோட்டின் இதில் அதிகமாக உள்ளது. மேலும் இதன் விழுதில் இருக்கும் என்சைம் ஒரு சிறந்த தோல் உரிதலுக்கான செயலை செய்ய உதவுகிறது.

சர்க்கரை

சர்க்கரையில் க்ளைகோலிக் அமிலம் உள்ளதால் பருக்கள் மற்றும் இதர சரும தொந்தரவுகளுக்கு தீர்வாக இருக்கிறது. பாக்டீரியாவை எதிர்த்து போராடி, சருமத்தை தூய்மையாக வைக்க உதவுகிறது.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்