இள நரையை இயற்கையாக போக்க வேண்டுமா? இதை படிங்க!

Report Print Jayapradha in அழகு

வயதான காலத்தில் வர வேண்டிய வெள்ளை முடி தற்போது இளமையிலேயே பலருக்கு வந்துவிடுகிறது. வெள்ளை முடி இளமையிலேயே வருவதால், பலரும் முதுமைத் தோற்றத்துடன் காணப்படுகின்றனர்.

வெள்ளை முடியைப் போக்க ஹேர் கலரிங், ஹேர் டைகளை வாங்கிப் பயன்படுத்தி, முடி ஆரோக்கியத்தைக் கெடுப்பதிற்கு பதிலாக அதை சரி செய்யும் சில எளிய ஆயுர்வேத வழிகளை பற்றி பார்ப்போம்.

நரை முடியை கருமையாக மற்றும் வழிகள்

  • வெள்ளை முடிக்கு மிகவும் சிறப்பான ஆயுர்வேத சிகிக்சை என்றால் பாதாம் எண்ணெயுடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து ஸ்கால்ப்பில் படும்படி தடவி மசாஜ் செய்து அலச வேண்டும். இப்படி அடிக்கடி செய்து வந்தால், வெள்ளை முடியைப் போக்கலாம்.
  • வெள்ளை முடியைப் போக்க மாட்டுப் பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட வெண்ணெய் மிகவும் உதவியாக இருக்கும். எனவே அடிக்கடி வெண்ணெய் கொண்டு தலைமுடியை மசாஜ் செய்து வாருங்கள்.
  • ஒரு நெல்லிக்காயை அரைத்து பேஸ்ட் செய்து, அதை ஸ்கால்ப்பில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலசினால் நல்ல பலன் கிடைக்கும்.
  • வாரம் இரண்டு முறை தேங்காய் எண்ணெய் மற்றும் அதில் தேவையான அளவு கறிவேப்பிலை சேர்த்து பின்பு அதனை மிதமான தீயில் சூடேற்றி இறக்கி, குளிர வைத்து, பின் அந்த எண்ணெயை ஸ்கால்ப்பில் படும்படி தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு வெதுவெதுப்பான நீரில் தலைமுடியை அலசினால் நரைமுடி வருவதைத் தடுக்கலாம்.
  • நான்கு ஸ்பூன் பாதாம் எண்ணெயுடன் ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் சாறு மற்றும் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து பின் அதனை ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து 45 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும்.
  • நான்கு ஸ்பூன் நெல்லிக்காய் பொடியில் 1 எலுமிச்சையின் சாற்றினை சேர்த்து, அத்துடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து 1 மணிநேரம் ஊற வைத்துக் கொண்டு பின் அதனை ஸ்கால்ப்பில் படும்படி தடவி 25 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் ஷாம்பு ஏதும் பயன்படுத்தாமல் அலச வேண்டும்.
  • பாதாம் எண்ணெயுடன் நல்லெண்ணெய் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி 20 நிமிடம் மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு பயன்படுத்தி வெதுவெதுப்பான நீரில் தலையை அலச வேண்டும்.
  • வாரத்திற்கு 2-3 முறை தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பை மசாஜ் செய்து ஊற வைத்து அலச வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நரைமுடியைத் தடுக்கலாம்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்