மகப்பேறு தழும்புகளை எளிதில் குறைக்க வேண்டுமா? இதை டிரை பண்ணி பருங்க

Report Print Jayapradha in அழகு

குழந்தை பெற்ற பின், பொதுவாக எல்லோருக்கும் ஏற்படக்கூடிய பிரச்னை தான் தழும்புகள் என்றாலும், இது மிகுந்த மன சங்கடத்தை அளிக்கும்.

வரி வரியாய் ஏற்பட்ட தழும்புகளை எப்படி போக்குவது என்றுதான் பலரும் கவலைப்பட்டு கொண்டிருப்பர்.

வயிறு விரிவடைந்து மீண்டும் சுருங்கும்போது, டெர்மிஸ் படிமம் உடைக்கப்படுவதால், ஸ்ட்ரெச் மார்க் விழுகிறது.

இத்தகைய தழும்புகளை இயற்கை வைத்தியம் மூலம் எப்படி குறைக்க முடியும் என்பதை பற்றி பார்ப்போம்.

தழும்புகளை நீக்கும் எளிய முறைகள்
  • தினமும் ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள இடத்தில் 15-20 நிமிடம் ரோஸ்மேரி ஆயிலை பாதாம் எண்ணெயுடன் கலந்து மசாஜ் செய்து வந்தால் தழும்பானது முழுமையாக மறையும்.
  • பிரசவமாக இருக்கும் 3-வது மாதத்தில் இருந்து மாதுளைத்தோலையும், பசு நெய்யையும் கலந்து வயிற்று பகுதிகளில் தடவி வரலாம்.
  • கர்ப்பமாக இருக்கும் பொழுது, அதாவது 7வது மாதத்தில் இருந்து ஆலிவ் ஆயிலை அடி வயிறு, கால், தொடைகளில் தேய்க்க வேண்டும். 30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரால் குளிக்க வேண்டும்.
  • இரவில் படுக்கும் முன் தினமும் பாதாம் எண்ணெயை, ஆலிவ் ஆயில் மற்றும் கோதுமை எண்ணெயுடன் கலந்து மசாஜ் செய்ய வேண்டும்.
  • நேராக நின்று கொண்டு இரண்டு கைவிரல்களும், கால் விரல்களை தொடுவதைப் போல தினமும் செய்யலாம். மேலும் தழும்புகள் உள்ள இடத்தில் எலுமிச்சை சாறு கொண்டு மசாஜ் செய்தால் தழும்புகள் மறையும்.
  • தழும்புகளில் ஐஸ் கட்டிகள் கொண்டு மசாஜ் செய்வது, சரும துளைகளை இறுக்கி தோல் நிறமிகளை குறைக்கும். ஆகவே தழும்புகள் குறையும். மேலும் வாரம் இரண்டு முறை கோதுமை எண்ணெயுடன், சிறிது ரோஸ் எண்ணெய் கலந்து மசாஜ் செய்ய வேண்டும்.
  • தக்காளி சாற்றில் உள்ள ஆன்டி ஆக்சிஜனேற்ற பண்புகள் சரும நிறத்தை குறைத்து, சேதம் உண்டாவதை தடுக்கிறது. அசிங்கமாக உள்ள தழும்புகளை தினமும் 20 நிமிடம் லாவண்டர் எண்ணெயுடன், ஆலிவ் ஆயில் கலந்து, தழும்புகள் இருக்கும் இடத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் விரைவாக போக்கலாம்.
  • ஓட்ஸனாது இறந்த செல்களை நீக்கும். எனவே ஓட்ஸை பாலில் கலந்து தழும்புகள் உள்ள இடத்தில தேய்ப்பதால் தழும்புகளை குறைக்க உதவும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்