முகத்தில் இருக்கும் நீங்கா கருமையைப் போக்க? இதோ சில வழிகள்

Report Print Santhan in அழகு
814Shares
814Shares
ibctamil.com

எலுமிச்சை, இதில் உள்ள வைட்டமின் சி, சிட்ரிக் அமிலம் மற்றும் இதர உட்பொருட்கள் சரும பிரச்சனைகளை விரைவில் போக்கும்.

முக்கியமாக எலுமிச்சை சருமத்தில் உள்ள கருமைகளைப் போக்க வல்லது.

இங்கு சருமத்தில் உள்ள நீங்கா கருமையைப் போக்க எலுமிச்சையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.

எலுமிச்சை சாறு மற்றும் வெள்ளரிக்காய்

ஒரு பௌலில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் பேஸ்ட்டை ஒன்றாக கலந்து கொள்ளுங்கள்.

பின் அதை கருமையாக உள்ள பகுதிகளில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள்.

இந்த முறையை வாரத்திற்கு 3-4 முறை மேற்கொண்டால், சருமத்தில் உள்ள கருமை முற்றிலும் போய்விடும்.

எலுமிச்சை சாறு மற்றும் மஞ்சள் தூள்

1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில் 1 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் 1/2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

பின் அதை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, 5-10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள்.

இந்த கலவையை வாரத்திற்கு 2 முறை சருமத்தில் பயன்படுத்தினால், நல்ல பலன் கிடைக்கும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்