எண்ணெய் வழியும் முகமா? இதோ சூப்பரான டிப்ஸ்

Report Print Fathima Fathima in அழகு

உங்கள் முகத்தில் எப்போதும் எண்ணெய் வழிந்து கொண்டிருக்கிறதா? கவலையை விடுங்கள்.

எண்ணெய் பசை நீங்கி மிக அழகாக காட்சியளிக்க சூப்பரான டிப்ஸ் இதோ,

கற்றாழை

கற்றாழையில் இருக்கும் வெள்ளை நிற ஜெல்லியை எடுத்து அரைத்து, அதை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.

புதினா

புதினா இலைகளை நீரில் கொதிக்க வைத்து, அந்நீரை எடுத்து குளிர வைத்து ஒரு காட்டன் துணி கொண்டு குளிர்ந்த நீரில் நனைத்து முகத்தில் துடைத்து வந்தால் எண்ணெய் பசையை கட்டுப்படுத்தும்.

தக்காளி மற்றும் தேன்

தக்காளியின் சாறு எடுத்து அதற்கு சமமாக தேனை கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் வரை ஊற வைத்து, பின் கழுவினால் முகம் எண்ணெய் பசையின்றி காணப்படும்.

வெள்ளரிக்காய் மற்றும் தயிர்

வெள்ளரிக்காயை துருவி அரைத்து, அதோடு கொஞ்சம் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவினால் முகத்தில் உள்ள எண்ணெய் பசை மட்டுமின்றி அழுக்குகள் முழுவதுமாக நீங்கிவிடும்.

ஐஸ்கட்டி

ஐஸ் நீர் அல்லது ஐஸ் கட்டிகளை எடுத்துக்கொண்டு முகத்தில் சிறுது நேரம் மசாஜ் செய்து வந்தால், முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி சருமத்துளைகள் இறுக்கப்பட்டு, எண்ணெய் பசைகள் வெளிப்படுவதை தடுக்கலாம்.

வெள்ளை வினிகர்

வெள்ளை வினிகரை நீரில் சரிசமமாக கலந்து, காட்டன் துணியில் நனைத்து முகத்தில் துடைத்து எடுத்தால் அதிகப்படியான எண்ணெய் பசைகள் நீங்கி முகம் பொலிவோடு காணப்படும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments