அவுஸ்திரேலியாவில் பலமாதங்களாக பரவி பல லட்சகணக்கான உயிர்களை அழித்த காட்டுத் தீ குறித்து விரிவான விசாரணை இன்று துவங்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு, துவங்கிய காட்டுத் தீ இந்த ஆண்டு பெப்ரவரியில் அணைக்கப்பட்டது.
இதில், 33பேர் கொல்லப்பட்டதுடன் 2,500க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாகின. மேலும், பல லட்ச கணக்கான விலங்குகள் பலியானதுடன், காடுகளில் உள்ள மரங்களும் சேதமடைந்தன.
இதற்கான காரணம் என்ன என்பது குறித்து விரிவான விசாரணை இன்று துவங்கியுள்ளது என்று Reuters செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விசாரணை ஆணையர் Mark Binskin இமெயில் வாயிலாக வெளியிட்ட அறிக்கையில், மில்லியன் கணக்கான ஹெக்டேர் அளவு நிலம், பல்லாயிர கணக்கானோரின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், 6 மாதங்களில் விரிவான விசாரணை நடத்தப்பட்டு. அடுத்து இதுபோன்ற துன்பம் நிகழாமல் தடுக்க வழி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.