வீட்டு அறையில் தனியாக தூங்கிகொண்டிருந்த இளம்பெண்! நள்ளிரவில் கண்விழித்த போது கண்ட அதிர்ச்சி காட்சி... சிசிடிவி வீடியோ

Report Print Raju Raju in அவுஸ்திரேலியா
911Shares

அவுஸ்திரேலியாவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த இளம் தாயிடம் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டு தப்பியோடிய மர்ம நபரின் சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெர்த்தை சேர்ந்த 30 வயது பெண் தனது 5 வயது மகனுடன் வீட்டில் இரு தினங்களுக்கு முன்னர் இரவு தூங்கி கொண்டிருந்தார்.

மகன் பக்கத்து அறையில் படுத்திருந்த நிலையில் இளம் பெண் தனியாக படுத்திருந்தார். நள்ளிரவு 12.30 மணிக்கு திடீரென அப்பெண் கண் விழித்த போது கண்ட காட்சி அவரை அதிர செய்தது.

ஏனெனில் மர்ம நபர் ஒருவர் அவர் மீது சாய்ந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து கத்தினார்.

பின்னர் அந்த நபரிடம் இருந்து அப்பெண் விலகிய நிலையில் மர்ம நபர் வீட்டிலிருந்து வேகமாக தப்பியோடியுள்ளான்.

இந்த சமயத்தில் அப்பெண்ணின் கணவர் இரவு பணிக்கு சென்றிருக்கிறார்.

வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே அந்த நபர் நுழைந்துள்ளதாக கூறியுள்ள பொலிசார் அவரின் வயது 40ல் இருந்து 50 வரை இருக்கும் என கூறியுள்ளனர்.

இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில் மர்ம நபரை பொலிசார் தேடி வருகின்றனர்.

வீடியோவை காண

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்