துரோகம் செய்த கணவனை வெளிப்படையாக அவமதிக்க மனைவி செய்த அதிரவைக்கும் செயல்!

Report Print Balamanuvelan in அவுஸ்திரேலியா

தனக்கு துரோகம் செய்த கணவனை வெளிப்படையாக அவமதிப்பதற்காக அதிரவைக்கும் ஒரு செயலை செய்துள்ளார் ஒரு மனைவி.

தாங்கள் படுத்துறங்கும் மெத்தையை வீட்டிக்கு வெளியே அனைவரும் காணும் வண்ணம் சுவரில் சாய்த்து வைத்த அந்த பெண், அந்த மெத்தையில் சிவப்பு நிற சாயத்தால் வெளிப்படையாக ஒரு செய்தியையும் எழுதினார். அதில், வீட்டின் பூட்டுக்களை மாற்றிவிட்டேன்.

இந்த மெத்தையை எடுத்துக்கொண்டு உன் புதுக்காதலி வீட்டுக்கே போய்விடு. உன்னை விவாகரத்து செய்கிறேன்.

நீ என்ன செய்தாய் என்பதை நம் பிள்ளைகளிடமும் சொல்லிவிட்டேன். அவர்களுக்கு இனி அவர்கள் அப்பா மீது அன்பில்லை என்று எழுதப்பட்டிருந்தது. இந்த சம்பவம் அவுஸ்திரேலியாவில் நடந்ததாக கருதப்படுகிறது.

இந்த புகைப்படத்தை சமூக ஊடகம் ஒன்றில் அந்த பெண் பதிவேற்றம் செய்ய, சிலர் அந்த பெண்ணுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள அதே நேரத்தில், சிலர் குழந்தைகளுக்கு இந்த விடயத்தை தெரியப்படுத்தியதற்காக அந்த பெண்ணை கடிந்துகொண்டுள்ளார்கள்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்