லொட்டரியில் பரிசு விழுவது போல் தனக்கு தானே கற்பனை செய்த நபருக்கு கிடைத்த பெரிய அதிர்ஷ்டம்!

Report Print Raju Raju in அவுஸ்திரேலியா
357Shares

லொட்டரியில் பரிசு விழுவது போல அடிக்கடி கற்பனை செய்து வந்த நபருக்கு உண்மையிலேயே கோடிக்கணக்கில் பரிசு விழுந்துள்ளது அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் Batemans Bay-ஐ சேர்ந்த நபர் தனக்கு லொட்டரியில் பெரிய பரிசுகள் விழுவது போல அடிக்கடி கற்பனை செய்து வந்திருக்கிறார்.

இதை தனது குடும்பத்தாரிடமும் சொல்லி வந்தார்.

இந்நிலையில் லொட்டரி விளையாடும் பழக்கம் கொண்ட அந்த நபருக்கு கற்பனை உண்மையாகும் வகையில் $2.5 மில்லியன் பரிசு விழுந்துள்ளது.

லொட்டரியில் பரிசு வென்ற அதிர்ஷ்டசாலி வசிக்கும் Batemans Bay நகரில் காட்டுத் தீயால் பெரிய சேதம் ஏற்பட்டிருந்தது.

பரிசு விழுந்தது குறித்து வெற்றியாளர் கூறுகையில், லொட்டரியில் இவ்வளவு பெரிய பரிசு விழுந்ததை நம்பவே முடியவில்லை, உண்மையிலேயே இது எனக்கு அதிர்ச்சியையே கொடுக்கிறது.

லொட்டரியில் பரிசு விழுவது போல கனவும், கற்பனையும் எனக்கு ஏற்படும், இது குறித்து குடும்பத்தாரிடம் கூறுவேன்.

ஆனால் உண்மையிலேயே பரிசு விழுந்ததை அவர்களிடம் பெருமையுடன் சொல்வேன்.

ஐரோப்பாவுக்கு சுற்றுலா செல்வது குறித்து மனைவியுடன் சமீபத்தில் தான் பேசி கொண்டிருந்தேன், இந்த பணத்தை வைத்து அங்கு செல்வேன்.

பரிசு விழுந்த விடயத்தை மனைவியிடம் இன்னும் நான் சொல்லவில்லை, இன்று இரவு உணவகத்துக்கு சாப்பிட செல்லும் போது அது குறித்து அவரிடம் சொல்வேன் என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்