அவுஸ்திரேலிய விசாவில் செய்யப்பட்டுள்ள பெரிய மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு!

Report Print Balamanuvelan in அவுஸ்திரேலியா
155Shares

அவுஸ்திரேலிய பணி, சுற்றுலா விசாவை பயன்படுத்துவதற்கான காலகட்டத்தில் மாற்றம் குறித்த செய்தி ஒன்றை அவுஸ்திரேலிய புலம்பெயர்தல் துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய வரை படத்தையே மாற்றிப்போட்ட காட்டுத் தீயின் தாக்கத்திலிருந்து விடுபட அவுஸ்திரேலியர்கள் போராடிக்கொண்டிருக்கும் நிலையில், அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுலா வருவோர் மற்றும் சுற்றுலா வரும்போது தற்காலிக பணி செய்வோரின் உதவியையும் எதிர்பார்க்க வேண்டிய ஒரு சூழல் அவுஸ்திரேலியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

ஆகவே, அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுலா வருவோர், தங்கள் விசா நீட்டிப்புக்கு விண்ணப்பிக்கும்போது, தன்னார்வலர்களாக பணி செய்வதை ஒரு பணியாக குறிப்பிட்டு, விசா நீட்டிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

அத்துடன் சுற்றுலாவின்போது பணி செய்வோருக்கான அனுமதியும் ஆறுமாதங்களிலிருந்து ஒரு ஆண்டாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஒரு நிபந்தனை, அவர்கள் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதியில், ஒரே வேலை வழங்குபவரிடம் தொடர்ந்து பணி செய்யவேண்டும், அதாவது வெவ்வேறு ஆட்களிடம் பணி செய்யக்கூடாது.

உள்ளூர் பணியாளர்களால் மட்டும் செய்து முடிக்க இயலாத அளவுக்கு இந்த பணி பிரமாண்டமானதாக இருப்பதால், சுற்றுலா வருவோரின் உதவியையும் பயன்படுத்தி அதை செய்து நிறைவேற்றும் நோக்கில் இந்த விசா நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்