அவுஸ்திரேலியாவில் கீழே விழுந்து நொறுங்கிய விமானம்!

Report Print Vijay Amburore in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில், அதில் பயணித்த 3 பேரும் உயிரிழந்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

நியூ சவுத் வேல்ஸில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த, கனடாவின் கோல்சன் ஏவியேஷனுக்கு சொந்தமான ஹெர்குலஸ் சி -130 என்கிற விமானம், உள்ளூர் நேரப்படி மதியம் 1.30 மணியளவில் தரையில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் பயணித்த 3 அமெரிக்கர்களும் உயிரிழந்திருப்பதாக NSW இன் பிரதமர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

கண்காணிப்பு தளங்களின்படி, விமானம் மதியம் 12.05 மணிக்கு ரிச்மண்டில் உள்ள RAAF தளத்திலிருந்து புறப்பட்டு, பிற்பகல் 2 மணிக்குள் திரும்பவிருந்தது. பிற்பகல் 1.30 க்கு சற்று முன்னர் கான்பெர்ரா அருகே நமட்கி தேசிய பூங்கா மீது பறந்து சென்றுள்ளது. அடுத்த சில நிமிடங்களிலே தொடர்பை இழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...