கிட்டத்தட்ட 2000 வீடுகள் எரிந்து நாசம்! அவுஸ்திரேலியா காட்டு தீயினால் சோகம்

Report Print Abisha in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா காட்டுத் தீயில் கிட்டத்தட்ட 2000 வீடுகள் முழுவதும் சேதம் அடைந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் தென் கிழக்கு பகுதியில் பரவி வரும் காட்டுத் தீயினால், பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

இதில், 26 பேர் தற்போது வரை கொல்லப் பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ள நிலையில், மில்லியன் கணக்கான காட்டு விலங்குகளும் கொல்லப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயணைப்பு வீரர்கள், மீட்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தாலும் காலநிலை அதற்கு உகந்ததாக இல்லை. அதிக வெப்பத்தால் மேலும், காட்டுத் தீ தொடர்ந்து பரவி வருகின்றது.

இந்நிலையில், நீ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள அதிகாரிகள் தரப்பில், அங்கு 1,588 வீடுகள் முழுவதும் சேதமடைந்துள்ளதாக கணக்கிட்டுள்ளனர். மேலும், 650க்கும் மேற்பட்ட வீடுகள் தீயினால் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியாவை சேர்ந்த பலரும் தங்கள் வீடுகளை விட்டு அவர்கள் உறவினர்கள் வீடுகளை நோக்கி படை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...