ஏ.டி.எம் இயந்திரத்தையே தூக்கி சென்ற கொள்ளையர்கள்: கமெராவில் சிக்கிய காட்சி!

Report Print Balamanuvelan in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில், ஏ.டி.எம் இயந்திரத்தில் பணத்தை கொள்ளையடிப்பதற்கு பதில், அந்த இயந்திரத்தையே கொள்ளையடித்துச் சென்றுள்ளார்கள் கொள்ளையர்கள் சிலர்.

குயின்ஸ்லாந்தில் அதிகாலை 3 மணியளவில் ஜே.சி.பி இயந்திரம் ஒன்றைக் கொண்டு ஏ.டி.எம் இயந்திரம் ஒன்றை கொள்ளையர்கள் தூக்கிச் செல்லும் காட்சி ஒன்று கண்காணிப்பு கமெரா ஒன்றில் சிக்கியுள்ளது.

ஷாப்பிங் சென்டர் ஒன்றின் முன் அமைக்கப்பட்டிருந்த அந்த இயந்திரத்தை ஜே.சி.பி உதவியுடன் தூக்கிச் சென்ற அந்த கொள்ளையர்கள், அதிலுள்ள பணம் முழுவதையும் எடுத்துவிட்டு, பள்ளி ஒன்றின் அருகில் அந்த காலி இயந்திரத்தை மட்டும் போட்டுவிட்டுச் சென்றுள்ளார்கள்.

கொள்ளையர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்காத நிலையில், பொலிசார் கொள்ளையர்களைப் பிடிக்க பொதுமக்களின் உதவியை கோரியுள்ளார்கள்.

அந்த ஏ.டி.எம் இயந்திரத்தில் எவ்வளவு பணம் இருந்தது என்பது போன்ற தகவல்களை பொலிசார் வெளியிடவில்லை.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்