அவுஸ்திரேலியாவில் மழை....! ஆனால் ஆய்வாளர்கள் வழங்கியுள்ள கடும் எச்சரிக்கை?

Report Print Abisha in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில், மழை பெய்த நிலையில், இந்த மழை மேலும் வெப்பத்தை அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் கடந்த சில வாரங்களாக காட்டுத் தீ பரவி வருகின்றது. கடந்த 6 மாதங்களாக மழை இல்லாததும், பருவ நிலை மாற்றமும் தான் இதற்கான முக்கிய காரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஞாயிற்று கிழமை, கிழக்கு கடற்கரை, சிட்னி, மெல்போர்ன் மற்றும் நீயூ சவுத் வேல்ஸ் சில பகுதிகளில் மழை பொழிந்தது.

ஆனால், வரும் வியாழக்கிழமை வெப்பநிலை இன்னும் அதிகரிக்கும் என்று, ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். தொடர்ந்து விக்டோரியா மற்றும் நீயூ சவுத் வேல்ஸ் பகுதிகளில் பெரிய தீ பிளம்பு உருவாகலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

தற்போதுவரை ஏற்பட்டுள்ள இந்த காட்டுத்தீயின் கோரம் மனதை உலுக்கியுள்ளதாக நீயூ சவுத் வெல்ஸ் தலைவர் கிளாடி பெரெஜிக்லியன் தெரிவித்துள்ளார்.

தற்போது வரை மக்கள் பாதுகாப்பிற்கான முக்கிய பங்கை அரசு வழிவகுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய பிரதமர், ஸ்காட் மோரிசன், £53,000, டொலர் முதல் $69,000 டொலர் வரை நிவாரண பணிக்காக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்