காட்டுத் தீயில் கருகிய நிலையில் உயிரினங்கள்! உண்மை என்ன?

Report Print Fathima Fathima in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீ மிக வேகமாக பரவி வருகின்றது, இதில் ஆயிரக்கணக்கான உயிரினங்கள் தீயில் கருகி சாம்பலாகி வருகின்றன.

இவற்றை காப்பாற்ற உலகெங்கிலும் இருந்து தன்னார்வலர்கள் முயன்று வருகின்றனர்.

இந்நிலையில் சிட்னி பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி, இந்தத் தீ விபத்தினால், பறவைகள், பாலூட்டி இன விலங்குகள், ஊர்ந்து செல்லும் விலங்குகள் என சுமார் 50 கோடி உயிரினங்கள் பலியாகக் கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

சில விலங்குகளும் தாவரங்களும் அழியும் அபாய நிலையில் இருப்பதாகவும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையே பழைய படங்களும் வைரலாகி வருகின்றன.

2017ம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் எடுக்கப்பட்ட புகைப்படம்

2019ம் ஆண்டு பிப்ரவரியில் எடுக்கப்பட்டது.

இந்தோனேஷியாவில் 2012ம் ஆண்டு எடுக்கப்பட்டது.

2009ம் ஆண்டு காட்டுத்தீயால் எரிந்து போன குதிரை

ஓராண்டுக்கு முன் நடந்த சம்பவம்

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்