பெல்ஜியம் நாட்டைவிட இருமடங்கு பரவிய காட்டுத் தீ.... தற்போது நியூசிலாந்தில் இரத்த நிறத்தில் வானம்!

Report Print Abisha in அவுஸ்திரேலியா

கட்டுக்கடகாமல் எரிந்து வரும் காட்டுத்தீயால் அவுஸ்திரேலியாவில் பரவிய புகை தற்போது நியூசிலாந்திலும் பரவ தொடங்கியுள்ளது.

இந்த காட்டுத்தீயால், 26 பேர் பலியான நிலையில் இன்னும் வெப்பநிலைய அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. 15மில்லியன் ஏக்கர் அளவு தற்போது பரவியுள்ள தீயை அணைக்கும் பணியில் அரசு தீவிரம் காட்டினாலும் வனவிலங்குகள் தொடர்ந்து செத்து மடித்து வருகின்றனர்.

கிட்டத்தட்ட பெல்ஜியம் நாட்டின் இருமடங்களவு பரவியுள்ளது இந்த தீ. இதனால், உமிழப்படும் புகை தற்போது நீயூசிலந்து வரை பரவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இரு நாடுகளிலும், வானம் சிவந்து புகைமூட்டமாக காணப்படுகின்றது. அங்கு தற்போது உள்ள மக்கள் அபாயகரமான காற்றை சுவாசித்து வருகின்றனர்.

கொடும் காட்டுத்தீக்கு பருவ நிலைய மாற்றம் ஒரு காரணமாக கூறப்பட்டாலும் அவுஸ்திரேலிய அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவறியதே காரணம் என்று கருத்து நிலவுகிறது.

இந்த காட்டுத்தீ உலக சுற்றுசூழலை பேணும் கட்டாயத்திற்கு தள்ளியுள்ளதாக சுற்றுசூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்