அவுஸ்திரேலிய காட்டுத்தீக்காக நிர்வாண புகைப்படங்களை விற்பனை செய்து நிதி திரட்டும் மொடல்

Report Print Vijay Amburore in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலிய காட்டுத்தீயை எதிர்த்து போராடுவதற்கான நன்கொடைகளுக்காக, அமெரிக்க மொடல் அழகி ஒருவர் தன்னுடைய நிர்வாண புகைப்படங்களை விற்பனை செய்து வருகிறார்.

அவுஸ்திரேலியாவில் காட்டுத்தீ வேகமாக பரவி வருவதால், விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

இராணுவ வீரர்களும் பொதுமக்களை அப்புறப்படுத்துவதோடு , தீயை அணைக்கும் பணியில் விரைந்து செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் காட்டுத்தீயை எதிர்த்து அவுஸ்திரேலியர்களுக்கு பணம் திரட்டுவதற்காக ஒரு அமெரிக்க இன்ஸ்டாகிராம் மாடல் தனது எக்ஸ்-ரேடட் புகைப்படங்களை விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளார்.

LA- ஐ அடிப்படையாகக் கொண்ட கெய்லன் வார்ட் என்கிற மொடல் அழகி, வழக்கத்திற்கு மாறான தனது புகைப்பட விற்பனையால் தற்போதுவரை 100,000 டொலருக்கும் அதிகமான நிதியை திரட்டியுள்ளார்.

அவர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் சால்வேஷன் ஆர்மி போன்ற தொண்டு நிறுவனங்கள் மற்றும் தீயணைப்பு சேவைகளின் பட்டியலை இணைத்து, சில ஆயிரம் டொலர்களை திரட்ட முடியும் என நம்பியதாக கூறியுள்ளார்.

இதில் அதிகபட்சமாக ஒரு நபர் மட்டும், philanthropic சமூக நிறுவன அறக்கட்டளைக்கு 5,000 டொலர்களை நன்கொடையாக அளித்துள்ளார்.

இதற்கு அவருடைய குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையிலும் கூட தொடர்ந்து நிதி திரட்டும் பணியை செய்து வருகிறார்.

பேரழிவு தரும் இந்த காட்சிகளை பார்த்தால் எந்தவொரு சாதாரண மனிதனும் கவலைப்படுவான். உதவி செய்ய முன்வருவான் எனக்கூறியுள்ளார்.

கெய்லன் வார்ட்டின் இந்த செயலை இணையதளவாசிகள் பலரும் பாராட்டி ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதன்மூலம் பெரும் நிதி தொண்டு நிறுவனங்களை சென்றடைந்திருப்பதால், இன்ஸ்டாகிராமில் 765,000 மற்றும் ட்விட்டரில் 30,000 பின்தொடர்பவர்களைக் கொண்ட சக மாடல் ஜென்னா லீ இதேபோன்ற செயலை பின்பற்ற ஆரம்பித்துள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்