நாடு கடத்தப்பட்ட இலங்கை தமிழ் குடும்பம்! நடுவானில் திடீரென வந்த தகவல்...அடுத்து நடந்த அதிரடி திருப்பம்

Report Print Raju Raju in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் இருந்து வலுக்கட்டாயமாக இலங்கை செல்லும் விமானத்தில் ஏற்றப்பட்ட தமிழ் குடும்பத்தினர் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது நீதிமன்றம் அளித்த உத்தரவு குறித்த தகவல் வந்ததால் மீண்டும் அவர்கள் அவுஸ்திரேலியாவுக்கே அழைத்து செல்லப்பட்டனர்.

விசா விவகாரத்தில் இலங்கைத் தமிழரான நடேசலிங்கம், அவரது மனைவி பிரியா, குழந்தைகள் கோபிகா, தருணிகா ஆகியோர் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவர் என கூறியது அவுஸ்திரேலியா.

ஆனால் இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அவர்களை நாடு கடத்தக்கூடாது என மக்கள் பலர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதனிடையில் அவர்கள் அகதிகள் அல்ல என்று கூறி இவர்கள் வெளியேற்றப்படுவதற்கு ஆதரவான அரசின் நிலைப்பாட்டுக்கு வெள்ளிக்கிழமை அங்கீகாரம் கிடைத்தது.

இதையடுத்து இந்த குடும்பத்தை நாடு கடத்த சிறப்பு விமானம் தயாரான நிலையில் அதில் அவர்கள் ஏற்றப்பட்டனர்.

சில மணி நேரங்களில் இந்தக் குடும்பம் நாடுகடத்தப்படும் என்பதை அறிந்த போராட்டக்காரர்கள் வியாழக்கிழமை இரவு மெல்போர்ன் விமான நிலையம் விரைந்தனர்.

அவர்களை ஏற்றிக்கொண்ட விமானம் உள்ளூர் நேரப்படி வியாழன் இரவு 11 மணிக்கு புறப்பட்டுவிட்டது.

இதற்கிடையில் நீதிமன்றம் அவர்களை வெளியேற்றுவதற்கு அதிரடியாக தடை உத்தரவை பிறப்பித்தது.

ஆனால் நீதிமன்ற உத்தரவு கிடைப்பதற்கு முன்னரே விமானம் புறப்பட்டுவிட்டது.

பின்னர் இது குறித்த தகவல் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் உள்ள அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து விமானம் திருப்பப்பட்டு டார்வின் விமான நிலையத்தில் அதிகாலை 3 மணியளவில் விமானம் தரையிறக்கப்பட்டது.

மெல்போர்னில் இருந்து டார்வின் 3,000 கி.மீ. தூரம் ஆகும்.

இதனிடையில் விமானம் பறந்தபோது நடேசலிங்கம் - பிரியா தம்பதியின் மகள்கள் அழுது கொண்டிருந்தனர் என்றும் அவர்கள் அருகில் அமர அவரது தாய் அனுமதிக்கப்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்