கடவுளை புகழ்ந்தவாறு பெண்ணை கத்தியால் குத்திவிட்டு ஓடிய நபர்: பரபரப்பு வீடியோ!

Report Print Balamanuvelan in அவுஸ்திரேலியா

பெண் ஒருவரை கத்தியால் குத்திவிட்டு ஓடிய நபர் ஒருவர், பலமுறை அல்லாஹூ அக்பர் என கத்தியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் சிட்னியில், ஒருவர் ஒரு பெண்ணை கத்தியால் குத்திவிட்டு ஓட, அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் அந்த நபரை துரத்திப் பிடித்த காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

சிட்னியில் ஒரு பெண்ணை கத்தியால் குத்திய ஒரு நபரை அக்கம்பக்கதிலுள்ளவர்கள் பின்தொடர்ந்தனர்.

கையில் கத்தியுடன் சாலையில் அராஜகம் செய்த அந்த நபரை, வெறும் நாற்காலிகள் மற்றும் பெட்டிகளின் உதவியுடன் மக்கள் பிடித்தனர்.

கத்தியால் குத்தப்பட்ட பெண்ணும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், கையில் கத்தியுடன் ஒருவர் சாலையில் ஓடும் காட்சிகளும், மக்கள் அவரை தடுக்க முயல்வதோடு, துரத்திப் பிடித்து கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர், அந்த நபர் பல முறை அல்லாஹூ அக்பர் என கத்தியதாக தெரிவித்துள்ள நிலையில், பொலிசாரால் அதை நிரூபிக்க முடியவில்லை. விசாரணை முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers