தாயின் வேதனை பார்க்க முடியவில்லை... கருணை கொலையான அம்மாவைப் பற்றி மகள் கண்ணீர்

Report Print Santhan in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் புற்றுநோயால் அவதிபட்டு வந்த தாயின் வலிகளை பார்க்க முடியாமல் அவதிப்பட்ட மகள்கள், அவருக்கு சிரமம் இல்லாமல் விடை கொடுத்திருக்கும் சம்பவம் கண்கலங்க வைத்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தைச் சேர்ந்தவர் கெர்ரி ராபர்ட்சன்(61).

இவருக்கு கடந்த 2010-ஆம் ஆண்டு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளித்த வந்த போதும், எலும்புகள், நுரையீரல், கல்லீரல், இதயம் என அனைத்துப் பாகங்களுக்கு படிப்படியாக புற்றுநோய் பரவியது.

இதன் காரணமாக உடல்வலியால் மிகக்கடுமையான துன்பத்தை அனுபவித்து வந்தார்.

தொடர்ந்து மேற்கொண்டு வந்த கீமோதெரபி, லேசர் சிகிச்சைகளால் ஏற்பட்ட பக்க விளைவுகளும் அவரை மோசமாகப் பாதித்ததால், ஒரு கட்டத்தில் அவருக்கு கொடுக்கப்பட்டு வந்த சிகிச்சைக்கள் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் தான் கடந்த 2017-ஆம் ஆண்டு விக்டோரியா மாகாணத்தில் கொண்டுவரப்பட்ட கருணைக்கொலை அனுமதிக்கான சட்டம், கடந்த ஜுன் மாதம் அமலுகு வந்ததால், கெர்ரி ராபர்ட்சன் கருணை கொலை செய்யப்பட்டார்.

இந்தச் சட்டத்தின்படி கருணைக்கொலை செய்யப்பட்ட முதல் ஆஸ்திரேலியப் பெண், கெர்ரி ராபர்ட்சன் ஆவார்.

இது குறித்து அவரது மகள் நிகோல் ராபர்ட்சன் கூறுகையில், என் தாய் முன்னதாகவே கருணைக்கொலையை எதிர்பார்த்திருக்கக்கூடும்.

சட்டம் அமலுக்கு வருவது தாமதமானதால், அவர் அதிக வேதனையை அனுபவித்திருப்பார். அவரது எண்ணத்துக்கு முழு ஆதரவு தெரிவித்தோம் என்று கூறியுள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்