அவுஸ்திரேலியா நோக்கி படகில் சென்ற இலங்கை புகலிட கோரிக்கையாளர்கள்: பின்னர் நடந்தவை!

Report Print Balamanuvelan in அவுஸ்திரேலியா

படகு ஒன்றில் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் இந்தியப் பெருங்கடலில் தடுத்து நிறுத்தப்பட்டார்கள்.

மே மாதத்திலிருந்து இத்தகைய சம்பவம் நடப்பது இது மூன்றாவது முறையாகும்.

அந்த படகில் சுமார் 20 புகலிடக் கோரிக்கையாளர்கள் இருந்ததாக கருதப்படும் நிலையில், அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படையினர் ஞாயிறு இரவு கிறிஸ்துமஸ் தீவு அருகே அந்த படகை கைப்பற்றினார்கள்.

கரைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த நபர்கள், பின்னர் அரசு விமானம் ஒன்றில் ஏற்றப்பட்டு கொழும்புக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக அவுஸ்திரேலிய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஃபெடரல் தேர்தலுக்குப்பின் இதுவரை மொத்தம் 80 புகலிடக் கோரிக்கையாளர்கள் கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முயன்றுள்ளார்கள்.

கடந்த மாதம் 40க்கும் அதிகமானவர்கள் பயணித்த ஒரு படகு மூழ்கத் தொடங்கிய நிலையில், அவர்கள் அவுஸ்திரேலிய அதிகாரிகளால் இலங்கை கடற்படையின் உதவியுடன் மீட்கப்பட்டார்கள்.

அந்த சட்டவிரோத புலம்பெயர்வோர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டதை உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

இப்படி தொடர்ந்து இங்கையிலிருந்து புலம்பெயர்வோர் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முயற்சிகள் மேற்கொண்டு வருவதையடுத்து, இன்னும் அதிக படகுகள் வரலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளதால், அவுஸ்திரேலிய உள் விவகாரங்கள் அமைச்சர் Peter Dutton, இலங்கை தலைவர்களை சந்தித்துப் பேச வேண்டிய சூழல் ஏற்பட்டது.

தொலைக்காட்சியில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், மக்களை கடத்த விரும்புபவர்களுக்கு ஒன்றை தெளிவாக கூற விரும்புகிறேன், நாங்கள் இலங்கை மற்றும் பிற நாடுகளுடன் திருப்பி அனுப்பும் ஏற்பாடுகளைச் செய்துள்ளோம், எனவே அப்படி சட்ட விரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முயற்சிப்பவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றார் Peter Dutton.

இதையே அவுஸ்திரேலிய பிரதமர் Scott Morrisonம் எச்சரிகையாகவே விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்