பொலிஸ் வாகனம் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய வேன்.. விரட்டிச் சென்று பார்த்தபோது அதிர்ந்த பொலிசார்!

Report Print Kabilan in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் பொலிஸ் வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய வேன் ஒன்றினை, பொலிசார் மடக்கிப் பிடித்தபோது 273 கிலோ அளவு போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

சிட்னி நகரில் உள்ள காவல் நிலையம் அருகே பொலிஸ் வாகனம் ஒன்று நின்றுகொண்டிருந்தது. அப்போது வேகமாக வந்த வேன் ஒன்று பொலிஸ் வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.

ஆனால், அந்த வேன் நிற்காமல் சென்றுவிட்டது. விபத்து சத்தம் கேட்டு பொலிசார் வந்து பார்த்தபோது, காரின் முன்பக்க பகுதி சேதமடைந்திருந்தது. அதனைத் தொடர்ந்து, பொலிசார் சிசிடிவி கமெராவை ஆய்வு செய்தனர்.

அப்போது விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து தெரிய வந்ததைத் தொடர்ந்து, ஈஸ்ட்வுட் அருகே விரட்டிச் சென்ற பொலிசார் அந்த வேனை மடக்கி பிடித்தனர்.

அதன் பின்னர் அந்த வாகனத்தை சோதனையிட்டபோது, அட்டைப் பெட்டிகள் பல இருந்துள்ளன. அதனை திறந்து பார்த்தபோது ‘மெத்தம் ஃபெட்டமைன்’ என்ற போதைப்பொருள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

சுமார் 273 கிலோ எடையிலான அந்த போதைப்பொருளின் மதிப்பு 140 மில்லியன் டொலர்கள் (964 கோடி இந்திய மதிப்பில்) என்பது தெரிய வந்தது. பின்னர் பொலிசார் அவற்றை பறிமுதல் செய்ததுடன், வேனின் ஓட்டுநரை கைது செய்து கடத்தல் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்