அவுஸ்திரேலியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகளின் தாக்குதல் முறியடிப்பு: பொலிஸார் அதிரடி

Report Print Vijay Amburore in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களில் மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்த மூன்று பேரை கைது செய்திருப்பதாக பயங்கரவாத தடுப்பு பிரிவி பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

சிட்னி முழுவதும் செவ்வாய்க்கிழமை நடந்த சோதனைகளில் மூன்று பேரை கைது செய்துள்ளதாக அவுஸ்திரேலிய பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பால் ஈர்க்கப்பட்டு முக்கியமான கட்டிடங்கள் மற்றும் தூதரகங்களை குறி வைத்து தாக்க திட்டமிட்டிருந்ததாக கூறியுள்ளனர்.

அமெரிக்காவின் அறிவுறுத்தலின் பேரில் ஜாக்கிரதையாக இருந்த அவுஸ்திரேலிய அரசு 16 சத்தித்திட்டங்களை முறியடித்திருப்பதாக அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவர், 20 மற்றும் 23 வயதுடையவர்கள், இஸ்லாமிய அரசின் உறுப்பினர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

மூன்றாவதாக கைது செய்யப்பட்ட நபர் 30 வயதுடையவர். அவர் மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயரை பொலிசார் குறிப்பிடவில்லை, அவர்கள் பிற்பகுதியில் அல்லது புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிட்னியில் செய்தியாளர்களிடம் பேசிய அவுஸ்திரேலிய பெடரல் போலீஸ் உதவி ஆணையர் இயன் மெக்கார்ட்னி, காவல் நிலையங்கள், பாதுகாப்பு நிறுவனங்கள், தூதரகங்கள், நகர சபைகள், நீதிமன்றங்கள் மற்றும் தேவாலயங்கள் உட்பட பல இலக்குகளை அவர்கள் குறி வைத்திருந்தார்கள்.

இதுபோன்ற தாக்குதல் நடத்தும் மக்கள் இன்னும் இந்த சமூகத்தில் இருந்து வருகின்றனர். அவர்களின் செயல்கள் இஸ்லாமிய நம்பிக்கையை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று நான் கூற விரும்புகிறேன். அவர்கள் செய்வது மிகப்பெரிய குற்றம், அவை வெறுப்பையும், பயங்கரவாதத்தையும் குறிக்கின்றன என தெரிவித்துள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்