கைப்பேசியை அதிகம் உபயோகிப்பவர்களுக்கு கொம்பு முளைக்குமாம்! ஆய்வு தகவல்

Report Print Kabilan in அவுஸ்திரேலியா

கைப்பேசியை அதிக நேரம் குனிந்தபடியே பயன்படுத்தி வருவதால், தலையின் பின்புறம் கூர்மையான எலும்பு ஒன்று வளர்வதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இன்றைய காலகட்டத்தில் தகவல் பறிமாற்றம் என்பதையும் தாண்டி, சமூக வலைதளங்கள், வங்கி பரிவர்த்தனை, கேம்ஸ் என பல உபயோகங்களுக்காகவே கைப்பேசியை பலரும் பயன்படுத்துகின்றனர்.

தொழில் சார்ந்த முதலீட்டு பொருளாகவே கைப்பேசி இருக்கிறது. இதனால் கைப்பேசி இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை என்ற நிலை உருவாகி வருகிறது. குறிப்பாக ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு தான் இதில் அதிகம்.

இளைஞர்கள் பெரும்பாலும் குனிந்தபடியே ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகிறார்கள். இவ்வாறாக, குனிந்தபடியே கைப்பேசியை நீண்ட நேரம் உபயோகிப்பவர்களுக்கு உடல் வடிவில் மாற்றம் ஏற்படுவது தொடங்கி இருப்பதாக அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அதாவது, நீண்ட நேரம் கைப்பேசியை உபயோகிப்பவர்களுக்கு தலையின் பின்புறம் உள்ள மண்டை ஓட்டுக்குள், கூர்மையான எலும்பு ஒன்று வளர்வதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த சன்ஷைன் கடற்கரை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இதுகுறித்து கூறுகையில், அதிக நேரம் குனிந்தபடியே கைப்பேசியை பயன்படுத்துவதால், தலையின் முழு எடையும் மண்டை ஓட்டின் பின்புறம் செல்கிறது.

இதனால் தசை நாண்கள், தசை நார்கள் வளர்கின்றன. இதன் காரணமாக தலையின் பின்புறம் உள்ள மண்டை ஓட்டுக்குள் கூர்மையான எலும்பு ஒன்று வளர்கிறது என தெரிவித்துள்ளனர்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers