அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் குடியிருக்கும் தாயார் ஒருவர் தமது 7 வயது மகளுக்கு தற்போது மெனோபாஸ் அறிகுறிகள் தோன்றியுள்ளதாக நெஞ்சைப் பிசையும் தகவலை வெளியிட்டுள்ளார்.
நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் குடியிருப்பவர் டாம் டோவர். இவரது 7 வயதான மகளுக்கே தற்போது மெனோபாஸ் அறிகுறிகள் தென்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எமிலி என்ற தமது மகளுக்கு நான்கு வயதாக இருக்கும்போதே முதல் மாதவிடாய் ஏற்பட்டதாக கூறும் டாம் டோவர்,
மூன்று ஆண்டுகளில் தற்போது மெனோபாஸ் அறிகுறிகள் தோன்றியுள்ளதையும் அவர் வருத்தமுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.
2017 ஆம் ஆண்டு சிறுமி எமிலியின் உடலில் குறிப்பிட்ட ஹார்மோன்களின் உற்பத்தி தடைபட்டுள்ளதாக தெரியவந்தது.
இதுவே பின்னர் மாதவிடாய் ஏற்படுவதற்கும் எஞ்சிய பிரச்னைகளுக்கும் காரணியாக அமைந்தது என கூறும் தாயார் டாம் டோவர்,
மருத்துவர்களால் ஹார்மோன் மாற்று சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த சிகிச்சையால் அவருக்கு எந்த மாற்றமும் ஏற்படவில்லை என கூறும் டாம் டோவர்,
தற்போது தங்களது மகளை மீட்க எந்த தீர்வும் தங்கள் முன்னர் இல்லை எனவும் வருத்தமுடன் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், தங்களால் இயன்ற முறையில் அனைத்து சிகிச்சைகளையும் ஏற்பாடு செய்துவருவதாக டாம் டோவர் தெரிவித்துள்ளார்.
7 வயது பிள்ளைகள் பொதுவாக 23 கிலோ எடை வரை இருக்கும் என கூறும் டாம் டோவர், ஆனால் தமது மகள் தற்போது 65 கிலோ எடை இருப்பதாக தெரிவித்துள்ளார்.