இலங்கையை உலுக்கிய தாக்குதலில் பெற்றோரை இழந்த இளம்பெண்.... கை கொடுத்த அவுஸ்திரேலியா

Report Print Raju Raju in அவுஸ்திரேலியா

இலங்கை வெடிகுண்டு தாக்குதலில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணுக்கு எல்லா உதவியும் செய்வோம் என அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து தலைவர் கூறியுள்ளார்.

இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர்.

இதில் இலங்கையை சேர்ந்த ஜீவனா என்ற இளம்பெண்ணின் பெற்றோரும் பலியானார்கள்.

இந்நிலையில் ஜீவனாவுக்கு ஆறுதல் அளிக்கும் விதத்தில் அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து தலைவர் அன்னஸ்டசியா பலஸ்சுக் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், ஈஸ்டர் தினத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் ஜீவனா தனது பெற்றோரை இழந்துள்ளார்.

அவருக்கு எல்லா உதவியும் செய்வதோடு குயின்ஸ்லாந்து துணையாக இருக்கும்.

இலங்கை சமுதாயத்துடன் சேர்ந்து இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...