உலகின் அதிர்ஷ்டமான நபர்: ஒரே நம்பர்.... ஒரே நேரத்தில் அடித்த இரண்டு ஜாக்பாட்

Report Print Deepthi Deepthi in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவை சேர்ந்த நபர் ஒருவர் சுமார் 46.6 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் பரிசினை லொட்டரியில் வென்றுள்ளதன் மூலம் ஆச்சரியம் கலந்த சந்தோஷத்தில் உள்ளார்.

மெல்பேர்னின் St Albans என்ற இடத்தில் உள்ள ஒரு கடையில் முதலில் ஒரு லொட்டரி டிக்கெட் வாங்கியுள்ளார். அதன்பின்னர், இரண்டாவதாக Footscray லொட்டரி சென்டரில் மற்றொரு டிக்கெட் வாங்கியுள்ளார்.

இவர் வாங்கிய இரண்டு லொட்டரி டிக்கெட் நம்பர்களும் ஒன்றாக இருந்துள்ளது. இரண்டுக்கும் ஒரே நேரத்தில் பரிசு விழுந்துள்ளது. இந்த இரண்டு டிக்கெட்டுக்கும் சேர்த்து மொத்தம் 46.6 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் பரிசு விழந்துள்ளது.

பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த இவரிடம் லொட்டரி உரிமையாளர்கள் தொடர்பு கொண்டு தெரிவித்தவுடன், இவரால் நம்பமுடியவில்லை. கிண்டல் செய்கிறீர்களா என கேட்டுள்ளார்.

பின்னர், ஆன்லைனில் நம்பரை சரிசெய்து பார்த்து உறுதிசெய்தவுடன் அதிர்ச்சி கலந்த சந்தோஷம் அடைந்தார். வாரத்திற்கு ஒருமுறையாவது லாட்டரி வாங்கும் பழக்கம் உள்ளது. ஆனால் இதுவரை எனக்கு பரிசுவிழுந்ததில்.

தற்போது கிடைத்துள்ள இந்த பணத்தினை வைத்து சொந்தமாக வீடு வாங்கவிருக்கிறேன் என கூறியுள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers