அவுஸ்திரேலியாவில் இந்தியருக்கு 25 ஆண்டுகள் சிறை: குடியுரிமைக்காக காத்திருந்த நேரத்தில் நடந்த கொலை

Report Print Deepthi Deepthi in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் வசித்து வந்த Douglas Derick Eustace என்ற நபர் 2017 ஆம் ஆண்டு தனது மனைவியை 10க்கும் மேற்பட்ட முறை கத்தியால் குத்தி கொலைசெய்த குற்றத்திற்காக 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மெல்பேர்னின் Hallam என்ற பகுதியில் வசித்து வந்த Douglas Derick Eustace - Mary Freeman தம்பதியினருக்கு திருமணமான சில மாதங்களிலேயே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு சம்பவம் நடைபெற்ற அன்று நண்பர்களுடன் இணைந்து மது அருந்திக்கொண்டிருக்கையில், ஆண்கள் மேன்மையானவர்களா? பெண்கள் மேன்மையானவர்களா? என்ற விவாதம் எழுந்துள்ளது. இதில், கணவன் மனைவிக்கிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

கோபத்தின் உச்சத்திற்கு சென்ற Douglas, சமைலறையில் இருந்த கத்தியை எடுத்துவந்த தனது மனைவியி 10க்கும் மேற்பட்ட முறை குத்தி கொலை செய்துள்ளார். சக நண்பர்கள் தடுத்தபோதும் அதனை மீறி இந்த கொலையை செய்துள்ளார்.

கொலை செய்தபின்னர், நடந்தவை குறித்து காவல் நிலையத்தில் வாக்குமூலம் அளித்து தானாகவே சரடைணந்துள்ளார். இந்நிலையில் இவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட Douglas Derick Eustace, அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுலா வந்த இடத்தில் Mary Freeman - ஐ காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே வாழ்க்கை கசந்துள்ளது. இருப்பினும் Douglas - க்கு குடியுரிமை கிடைத்த பின்னர் விவாகரத்து செய்துகொள்ளலாம் என முடிவு செய்திருந்த நிலையில் இந்த கொலை நடந்துள்ளது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்