வெளிநாட்டில் என்னை மிகவும் சங்கடப்படுத்தியது! இலங்கை மாணவன் வெளிப்படுத்திய தகவல்கள்

Report Print Deepthi Deepthi in அவுஸ்திரேலியா

ஆசிய நாடுகளில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு கல்வி கற்க செல்லும் மாணவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என அவுஸ்திரேலிய மனித உரிமை ஆணையம் நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

2015 அல்லது 2016ஆம் ஆண்டுகளில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்களில் 25 சதவிகிதம் பேர் பல்கலைக்கழகத்திற்கு செல்லும் வழியிலும், 51 சதவிகித மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி, அதற்கு காரணமான நபர்கள் குறித்து தெரிந்தும் அதனை வெளியில் சொல்லாமல் இருக்கிறார்கள் என மனித உரிமை ஆணையம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

39 பல்கலைக்கழகங்களில் உள்ள 30,000 மாணவர்களிடம் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

பல்கலைக்கழக சூழலில் 1.4 சதவிகிதம் பேர் பாலியல் துன்புறுத்தலை அனுபவித்துள்ளனர். ஆண்களை விட, பெண்களே இதில் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இலங்கையை சேர்ந்த முன்னாள் சர்வதேச மாணவர் தேவன செனனயகே பிபிசிக்கு அளித்துள்ள பேட்டியில், மெல்போர்னில் உள்ள பல்கலைக்கழகத்தில் நான் சேரும் போது எனக்கு 18 வயது. இங்கு வந்துதான் மது, போதைப் பொருட்கள், சம்மதம் இல்லாமல் ஒருவரை தொடுவது போன்ற கலாசார நிகழ்வுகளை பார்த்தேன்.

இந்த சூழல் என்னை மிகவும் சங்கடப்படுத்தியது. ஆனால், எனக்கு நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள். புது நாட்டில் சர்வதேச மாணவராக இருப்பதால் நீங்கள் தனிமையாக இருப்பதாக உணரலாம் என்று தெரிவித்துள்ளார்.

சர்வதேச மாணவர்கள் புகார் அளிக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது, இதனால் அவர்களின் விசாவிற்கு ஏதேனும் பிரச்சனை வந்துவிடுமோ என்ற அச்சம் தான் என End Rape on Campus Australia (EROC) அமைப்பின் நிறுவனர் மற்றும் இயக்குநரான ஷர்னா ப்ரெம்னர் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான சர்வதேச மாணவர்கள் ஆசிய நாடுகளில் இருந்து முதன்முறையாக அவுஸ்திரேலியாவுக்கு வருகிறார்கள். புதிய கலாசாரம் குறித்து தெரியாமல் இருப்பது அவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதற்கு காரணமாக இருக்கலாம் என அவுஸ்திரேலிய சர்வதேச மாணவர் சங்கத்தின் தேசிய பெண்கள் அதிகாரியான பெல்லே லிம் தெரிவித்துள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்