நடுவானில் சரிந்து விழுந்த விமானம்.... 15,000 அடியில் அலறிய பயணிகள்: பகீர் கிளப்பிய சம்பவம்

Report Print Arbin Arbin in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவின் கான்பெர்ராவுக்கு சென்ற விமானம் ஒன்று நடுவானில் சுமார் 15,000 அடிகள் திடீரென்று சரிந்து விழுந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் இருந்து QF706 என்ற க்வண்டாஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று கான்பெர்ரா நோக்கி சென்று கொண்டிருந்தது.

சம்பவத்தின்போது குறித்த விமானமானது 25,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தது. அப்போது, திடீரென்று விமானத்தில் பலத்த சத்தம் ஒன்று பயணிகளை உலுக்கியுள்ளது.

மட்டுமின்றி ஆக்ஸிஜன் மாஸ்குகளும் வெளியாகியுள்ளது. அதேவேளையில் விமானம் சரசரவென குத்திட்டு சரிந்துள்ளது.

சுமார் 9 நிமிடங்களில் 15,000 அடி சரிந்த விமானம் அப்போது 25,000 அடியில் இருந்து 10,000 அடிக்கு வந்துள்ளது.

இதனிடையே சுதாரித்துக்கொண்ட விமானிகள் உடனடியாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் விமானத்தை கொண்டு வந்துள்ளனர்.

இதில் விமானத்தில் உள்ள அழுத்தம் தொடர்பான பிரச்னை காரணமாகவே விமானிகளின் கட்டுப்பாட்டில் இருந்து தவறியதாகவும்,

அது உடனடியாக சீர் செய்யப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், குறித்த சம்பவத்தின்போது பயணிகள் அனைவரும் விமானியின் சொல்லுக்கு கட்டுப்பட்டு அமைதி காத்ததாகவும் க்வண்டாஸ் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்