அவுஸ்திரேலியாவின் முக்கிய நகரில் பற்றி எரியும் காட்டுத்தீ! அவசர நிலை எச்சரிக்கை விடுப்பு

Report Print Kabilan in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவின் விக்டோரியாவில் வீசும் அனல் காற்றினால் காட்டுத்தீ பரவி வருகிறது.

விக்டோரியா மாகாணத்தில் அனல் காற்றினால் அங்குள்ள காடுகளில் காட்டுத்தீ பற்றி எரிந்தது. கடந்த சில நாட்களாக பற்றி எரியும் இந்த காட்டுத்தீயினால் வெளியேறும் புகை விண்ணை முட்டும் அளவுக்கு காட்சியளிக்கிறது.

மேலும், பலநூறு ஏக்கர் அளவில் இருக்கும் மரங்கள் தீக்கிறையாகியுள்ள நிலையில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

காட்டுத்தீ வேகமாக பரவி வருவதால் விமானங்கள் மூலம் ரசாயன பொடிகளைத் தூவி தீயை அணைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. எனினும், தொடர்ந்து தீப்பற்றி எரிவதால் விக்டோரியா மற்றும் தெற்கு அவுஸ்திரேலியாவின் பல பகுதிகள் புகை மூட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக அப்பகுதிகளின் அருகில் உள்ள குடியிருப்பு மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அதிகளவில் காட்டுத்தீயினால் ஏற்பட்ட புகைமூட்டத்தினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

காற்றின் வேகம் காரணமாக தீ வேகமாக பரவி வருவதால் தீயை அணைப்பதில் சிக்கல் நீடிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், பலநூறு ஏக்கர் அளவில் இருக்கும் மரங்கள் தீக்கிரையாகியுள்ளன.

இந்நிலையில் காட்டுத்தீ பரவியுள்ள பகுதிகளில் அவசர நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்