இறந்த குழந்தை ஆவியாக மீண்டும் தாயின் கர்ப்பப்பைக்குள் பிரவேசித்த சம்பவம்! ஒரு திகில் செய்தி

Report Print Balamanuvelan in அவுஸ்திரேலியா

இறந்த குழந்தை ஆவியாக மீண்டும் தாயின் கர்ப்பப்பைக்குள் பிரவேசித்த சம்பவம்! ஒரு திகில் செய்தி

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு தாய், தன் குழந்தை தன் கர்ப்பப்பையில் ஏற்கனவே ஒருமுறை வாழ்ந்ததாக கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார்.

Laura Mazzaவின் மகன் Luca மிகவும் ஸ்மார்ட்டான குழந்தை.

ரொம்பவும் மெச்சூர்டாக நடந்து கொள்வது அவன் வழக்கம்.

அவன் பிறப்பதற்கு பல ஆண்டுகள் முன்பு உள்ள பாடல்களை அவன் ஹம் செய்யும்போது, அதைக்கண்டு ஆச்சரியப்படுவார் Laura.

ஒருநாள் அவனை குளிக்கவைத்துக் கொண்டிருக்கும்போது Luca அம்மாவிடம், அம்மா, நாம் அவுஸ்திரேலியாவில் வாழ்கிறோமா? என்று கேட்க, Laura, ஆம் என்று கூறியிருக்கிறார்.

அதற்கு Luca, நான் அவுஸ்திரேலியாவில் வாழவில்லை, நான் உங்கள் வயிற்றுக்குள்தான் வாழ்ந்தேன் என்று கூறியிருக்கிறான்.

அதற்கு Laura, உண்மைதான் Luca, முன்பு நீ அம்மாவின் வயிற்றுக்குள் வாழ்ந்தாய், இப்போது அவுஸ்திரேலியாவில் வாழ்கிறாய் என்று கூற, இல்லை அம்மா, நான் முன்பு உங்கள் வயிற்றுக்குள் வாழ்ந்தேன், அப்புறம் நான் இறந்து போய் விட்டேன், இப்போது மீண்டும் உங்கள் வயிற்றில் வந்து பிறந்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறான்.

Luca பிறப்பதற்கு முன்பு தனக்கு ஒரு முறை கருச்சிதைவு ஆனதை நினைவுகூர்ந்த Laura அதிர்ந்துபோய் தொடர்ந்து கேட்க, அவன் கூறிய காரியங்களைக் கேட்டு தனக்கு உடலெங்கும் புல்லரித்துப்போனது என்கிறார்.

அம்மா, நான் உங்கள் வயிற்றுக்குள் வந்தேன், அப்புறம் இறந்துபோனேன், உங்களைத்தேடி அலைந்தேன், வீட்டுக்குப் போய் உங்களைத் தேடியும் உங்களை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

மிகவும் கவலையாக இருந்த நான் பின்னர் ஒரு தேவதையாகி விட்டேன்.

ஆனால் உங்களை நான் ரொம்பவே மிஸ் பண்ணியதால் திரும்பவும் உங்கள் வயிற்றுக்குள் வந்து உங்களுக்கு மகனாகப் பிறந்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறான் Luca.

தனது அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் Laura பதிவிட, அதற்கு பெருத்த வரவேற்பு கிடைத்ததோடு, அவரது கதையைப் படித்த பல தாய்மார்களும் தங்களுக்கும் உடலெல்லாம் புல்லரித்துப்போனது என்கிறார்கள்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்