மொபைல் போனில் தடை செய்யப்பட்ட தரவுகள்: இந்திய இளைஞரை நாடு கடத்தும் அவுஸ்திரேலியா

Report Print Arbin Arbin in அவுஸ்திரேலியா

மலேசியாவில் இருந்து அவுஸ்திரேலியா சென்ற இந்திய இளைஞரிடன் குழந்தைகள் தொடர்பில் ஆபாச வீடியோ காட்சிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அங்குள்ள நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார் 32 வயதான மன்பிரீத் சிங் என்ற இந்தியர்.

இந்த நிலையில் பெர்த் விமான நிலையத்தில் அவரது உடைமைகளை சோதனையிட்டதில், அவரது 2 மொபைல் போனில் குழந்தைகள் தொடர்பான 7 காணொளி காட்சிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கண்டெடுக்கப்பட்ட காணொளி காட்சிகளானது சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட வகை என பாதுகாப்பு அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் அவர் வைத்திருந்த வீடியோ ஆபாச காட்சிகள் கடுமையான தண்டனைக்குரியதாகவும் கருதப்படுகிறது.

இதனையடுத்து உடனடியாக மன்பிரீத் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டுமின்றி அவரது சுற்றுலா விசாவும் ரத்து செய்யப்பட்டது.

தொடர்ந்து கடந்த வியாழன்று அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் அவருக்கு 7 மாத கால சிறை தண்டனையும் 500 அவுஸ்திரேலிய டொலர் அபராதமும் விதித்து பெர்த் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் தண்டனை காலம் முடிவடைந்த பின்னர் மன்பிரீத் சிங் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என தெரியவந்துள்ளது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்