வறட்சியால் தள்ளாடும் அவுஸ்திரேலியா ..செத்து குவியும் குதிரைகள்! தவிக்கும் மக்கள்

Report Print Abisha in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் கடும் வறட்சியால் அங்குள்ள காட்டு குதிரைகள் தண்ணீரின்றி செத்து குவிகின்றன.

எப்போது பார்த்திராத அளவு அவுஸ்திரேலியாவில் வறட்சி வாட்டி வதைக்கின்றது. கடந்த ஆண்டுகளின் தென்னாப்பிரிகாதான் இதுபோன்ற சூழலை சந்தித்தது ஆனால் இந்த ஆண்டி ஏற்பட்டுள்ள நிலை அவுஸ்திரேலியாவிற்கு புதிது.

குறிப்பாக கடந்த சில மாதங்களாக அவுஸ்திரேலியாவில் மழையே இல்லை. இதனால் நிலத்தடி நீர் கூட இல்லாமல் இங்குள்ள மக்கள் அவதிபட்டு வருகின்றன. அதில் கிழக்கு அவுஸ்திரேலியா பகுதியில் கடும் வறட்சி நீடித்து வருகின்றது.

மேலும் அவுஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டு நகரத்தில் சில நாட்களாக 49.5 டிகிரி அளவுக்கு வெப்பம் பதிவாகியுள்ளது. இது அந்நாட்டில் இதுவரை கண்டிராத அளவு வெப்பநிலை ஆகும். அடிலெய்டு போலவே மேலும் 13 நகரங்கள் அதிக வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன.

அதிகரிக்கு வெப்பநிலையால் 24 மணி நேர இடைவெளியில் 44 பேர் கடும் விளைவுகள் சந்தித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2017-ம் ஆண்டில் அதிக வெப்பநிலை கொண்ட நாடுகளில் நான்காவது இடத்திலும், 2018-ம் ஆண்டு மூன்றாவது இடத்திலும் அவுஸ்திரேலியா இருந்து வந்தது.

இதுபோன்ற சூழல் உருவாக காலநிலை மாற்றம் தான் காரணம் என்று அந்நாட்டு வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது. வெப்பம் தாங்காமல் மனிதர்களே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், விலங்குகள் என்ன செய்யும் என்று சிந்திக்க முடியாத வண்ணம் அதிக பாதிப்புகள் நீடிக்கின்றது. குறிப்பாக வட மண்டலத்தில் உள்ள வறண்ட நிலத்தில் காட்டுக் குதிரைகளின் உடல்கள் அதிக அளவில் இறந்து காணப்படுகின்றன.

அவுஸ்திரேலியாவில் உள்ள அலெய்ஸ் ஸ்பிரிங்ஸ் என்ற இடத்தில் உள்ள உள்ளூர்வாசி கூறும்போது அவர் குளிக்க சென்ற நீர் ஓடையில் தண்ணீர் வறண்டதால் அங்கு டஜன் கணக்கில் குதிரைகள் செந்துகிடப்பதை பார்ப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அதில் கிட்டத்தட்ட 40-க்கும் மேற்பட்ட காட்டுக் குதிரைகள் இருந்தன என்றும் தெரிவித்துள்ளார். .

மேலும் மத்திய ஆஸ்திரேலியாவில் உள்ள பழங்குடி மக்களுக்காகப் போராடும் கவுன்சில் ஒன்று ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில் தற்போது வரை 50-க்கும் அதிகமான குதிரைகள் இறந்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்