உடலில் 500 உண்ணிகள்! பரிதாப நிலையில் மலைப்பாம்பு- வெளியான வீடியோ

Report Print Balamanuvelan in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் பிடிக்கப்பட்ட ஒரு மலைப்பாம்பின் உடலில், 500 உண்ணிகள், என்னும் ஒருவகை பூச்சிகள் இருப்பது தெரியவந்தது.

ஏதோ உடலிலிருந்து கட்டிகள் வளர்ந்தது போல் காணப்பட்ட அந்த மலைப்பாம்பை, பாம்புபிடிப்பதில் தேர்ச்சி பெற்ற ஒருவர் பிடித்து, விலங்குகள் நல மருத்துவமனை ஒன்றிற்கு கொண்டு சென்றார்.

வெளியான வீடியோ ஒன்றில் உடல் நலமில்லாததாக கருதப்படும் அந்த பாம்பை, நீச்சல் குளம் ஒன்றிலிருந்து பிடிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

அந்த பாம்பு அந்த உண்ணிகளை மூழ்கடிப்பதற்காக தண்ணீருக்குள் இறங்கியதாக கருதப்படுகிறது.

விலங்குகள் நல மருத்துவமனை ஒன்றில், மருத்துவர்கள் 500க்கும் மேற்பட்ட உண்ணிகளை அகற்றினர்.

அந்த பாம்பு ஏதோ மறைமுக நோய் அல்லது வெப்பத்தால் ஏற்பட்ட மன அழுத்தம் அல்லது வறட்சியால் பாதிக்கப்பட்டதாலேயே அத்தனை உண்ணிகள் அதன் உடலில் தொற்றியிருப்பதாக தெரியவந்துள்ளது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்