புதுமண தம்பதியை பின்தொடர்ந்த முதலை: அதிர்ச்சி புகைப்படத்தின் பின்னணி

Report Print Balamanuvelan in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றில் புதுமணத் தம்பதியினரின் பின்னால் ஒரு 2.5 மீற்றர் நீள முதலை இருப்பதைக் கண்ட பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

Queenslandஇல் நடத்தப்பட்ட அந்த போட்டோ ஷூட்டில், மணமக்களின் பின்னணியில் தொடர்ந்த அந்த முதலையை அந்த தம்பதியர் கவனிக்கவில்லை என பலரும் அதிர்ச்சியடைந்த நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த புகைப்படக்காரரான Stone என்பவர், அப்பகுதியில் முதலைகளே கிடையாது என்று கூறியிருக்கிறார்.

சொல்லப்போனால் சிட்னி தோட்டம் ஒன்றில் திருமணம் நடத்தினால், பழுப்பு நிற பாம்புகளை வேண்டுமானால் பார்க்கலாம் என வேடிக்கையாக கூறுகிறார் அவர்.

திருமண நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்யும் Alice Irvin கூறும்போது, நான் இந்த பகுதியில் 17 வருடங்களாக திருமண நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்து வருகிறேன், ஒரே ஒரு முறை இரண்டு சிறிய முதலைகளைக் கண்டிருக்கிறேன் அவ்வளவுதான் என்கிறார்.

இப்பகுதி நீந்துவதற்கும், கடற்கரையில் ஜாலியாக பொழுது போக்குவதற்கும் ஏற்ற இடம் என்று தெரிவிக்கும் அவர், அதனால்தான் பல புதுமணத் தம்பதியர் இந்த இடத்தால் ஈர்க்கப்படுகிறார்கள் என்கிறார்.

இவ்வளவு சர்ச்சைக்குப்பிறகு அந்த புகைப்படத்தில் காணப்படும் அந்த தம்பதியரே, புகைப்படக்காரர் தங்கள் புகைப்படத்தை எடிட் செய்து ஒரு முதலையின் படத்தைச் சேர்த்துள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் அந்த புகைப்படம் பகிரப்பட்டபின், அதைப் பார்த்த சிலரும் அந்த புகைப்படம் போட்டோஷாப் செய்யப்பட்டுள்ளது என்றும் அந்த முதலை போலியானது என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்