உணவு ஊட்டிவிட புதிய ரோபோ கண்டுபிடிப்பு! எங்கு தெரியுமா?

Report Print Kabilan in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் உணவை ஊட்டி விடுவதற்காக புதிய ரோபோ ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் ஆர்.எம்.ஐடி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இணைந்து, தானியங்கி உணவு ஊட்டும் ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

இந்த ரோபோவை நமது இடுப்பில் கட்டிக்கொண்டு, நாம் உணவு உண்ணும் நேரத்தை இதற்கு தெரிவித்துவிட்டால் போதும், சரியான நேரத்திற்கு உணவை ஊட்டும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்காக இந்த ரோபோவை நமது ஸ்மார்ட்போனுடன் இணைத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் ஸ்மார்ட்போனில் உள்ள Facial Recognition மூலம் இந்த ரோபோ இயங்கும்.

சாப்பிட்டுக் கொண்டே வேலை பார்க்க இந்த ரோபோ உதவும் என்பதால் நேரம் மிச்சமாகும் என பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்