என்னைக் கைவிடும் முன் அவன் சொன்ன வார்த்தை: சோகத்தில் அவுஸ்திரேலிய பிரபலம்

Report Print Balamanuvelan in அவுஸ்திரேலியா

தன்னைவிட 10 வயது குறைவான நபரைக் காதலித்த பெண்ணைப் பிரியும்போது, அந்த நபர் சொன்ன வார்த்தைகள் தனது ஆளுமையையே பாதித்து விட்டதாக மனம் நொந்து பேசியுள்ளார் ஒரு பெண்.

அவுஸ்திரேலிய தொலைக்காட்சி பிரபலமான Sami Lukis (48) தன்னைவிட 10 வயது குறைவான நபரைக் காதலித்து வந்தார். ஒரு கட்டத்தில் அந்த நபர் Lukisஐ விட்டு பிரிந்தார்.

பிரிவை விரும்பாத Lukisஐ விட்டு பிரிய முடிவெடுத்துவிட்ட அந்த நபரோ, நான் உன்னை விட்டு பிரிவதற்கு காரணம் நீயல்ல, உன் கர்ப்பப்பை என்று கூற அந்த வார்த்தைகள் அவரை சுக்கு நூறாக்கிவிட்டன.

நான் எதற்கும் லாயக்கில்லாதவள், நான் ஒரு பெண்ணே அல்ல என்னும் எண்ணம் எனக்கு ஏற்பட்டு விட்டது என்கிறார் Lukis.

சில ஆண்டுகளுக்குமுன் தன்னால் தாயாக இயலாது என்பதை அறிந்த போது, துடித்துப்போனதாகத் தெரிவிக்கும் Lukis, அதனால் வாழ்க்கை பெரிதளவில் பாதிக்காது, வாழலாம் என்று எண்ணியதாகவும், ஆனால் அவரது காதலர் அதையே ஒரு காரணமாகக் கூறி தன்னைப் பிரிந்ததை தாங்கிக் கொள்ள இயலவில்லை என்றும் வருத்தத்துடன் கூறுகிறார்.

காதலிக்கத் தொடங்கும்போது அவரால் தாயாக முடியாது என்பதை அறிந்தே தன் ஆண் நண்பர் தன்னிடம் பழகியதாகத் தெரிவிக்கும் Lukis, தோற்றுப்போனது போல் உணர்வதாகத் தெரிவிக்கிறார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்