12 மாதத்தில் 60 கிலோ எடை குறைத்த 16 வயது சிறுமி

Report Print Deepthi Deepthi in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் 16 வயதில் 127 கிலோ எடையால் அவதிப்பட்டு வந்த பள்ளி மாணவி 12 மாதத்தில் 60 கிலோ எடை குறைத்துள்ளார்.

Josie Desgrand என்ற பள்ளி மாணவி, தனது அதிக உடல் எடை காரணமாக ஆடைகள் அணிவதற்கே சிரமப்பட்டுள்ளார்.

பள்ளியில் கேலிக்கிண்டல்களுக்கு ஆளான இவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து பொதுவெளியில் செல்வதற்கே அவமானப்பட்டுள்ளார்.

இதனால், தனது உடல் எடையை குறைக்க முடிவு செய்த இவர், முதல் ஆறு மாதத்திற்கு இனிப்பு உணவுகள் எதையும் எடுத்துக்கொள்ளவில்லை. குறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகளை சாப்பிட்டுள்ளார்.

பழங்கள், நார்ச்சத்துள்ள உணவுகளையும் தாண்டி, தனக்கென ஒரு உடற்பயிற்சி ஆசிரியரை நியமித்து, தினமும் 2 மணிநேரம் உடற்பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

இதன் மூலம் 12 மாதத்தில் 60 கிலோ எடை குறைத்துள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்