வளர்ப்பு பிராணிகளுக்கான இறைச்சியை சமைத்து பரிமாறிய உணவகம்: பெருந்தொகை அபராதம் விதிப்பு

Report Print Arbin Arbin in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் செயல்பட்டுவரும் இந்திய உணவகம் ஒன்றில் வளர்ப்பு பிராணிகளுக்கான இறைச்சியை சமைத்து பரிமாறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விவகாரம் தொடர்பாக தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் 14,000 டொலர் அபராதம் விதித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் அமைந்துள்ள Cafe Marica என்ற இந்திய உணவகத்திலேயே வளர்ப்பு பிராணிகளுக்கான மாமிச உணவை பொதுமக்களுக்கு சமைத்து பரிமாறியதாக குற்றம் சாட்டப்பட்டது.

சுகாதார பரிசோதகர்கள் குறித்த உணவகத்தில் சோதனையிட்ட போது சுமார் 15 கிலோ அளவுக்கு வளர்ப்பு பிராணிகளுக்கான உணவு பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டது.

மட்டுமின்றி அந்த உணவகத்தின் உரிமையாளர் கோபிகரன் கிருஷ்ணசாமி, அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள சென்றபோது அதே இறைச்சியை சமைத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

உணவுப் பொருட்களை தங்கள் உணவகத்துக்கு வழங்கும் நபரால் இந்த தவறு நடந்துள்ளதாக கிருஷ்ணசாமி தமது பேஸ்புக் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

தங்களுக்கு வாடிக்கையாக உணவுப் பொருட்களை வழங்கி வருபவரை கண்மூடித்தனமாக நம்பியதால் தற்போது இந்த நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிர்ஷ்டவசமாக அந்த இறைச்சி உணவை வாடிக்கையாளர்கள் எவரும் உண்ணவில்லை எனவும், அதிகாரிகள் உரிய நேரத்தில் வந்து காப்பாற்றியதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

உணவக சமையலருக்கு ஆங்கிலம் தெரியாததே அந்த பொட்டலங்கள் சமையலறைக்கு வந்ததன் காரணமெனவும் கிருஷ்ணசாமி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்