என்னை கல்யாணம் செஞ்சிப்பியா என இறக்கும் தருவாயில் கேட்ட காதலன்: காதலி என்ன சொன்னார் தெரியுமா?

Report Print Raju Raju in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட காதலன், இறப்பதற்கு முன்னால் காதலிடம் பேசிய விடயம் மனதை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

மைக்கேல் ஓவென்ஸ் (23) என்பரின் தோழியாக இருந்தவர் ரோசி.

மைக்கேலின் வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த சமயத்தில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு ரத்த புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து மருத்துவமனையில் மைக்கேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருடன் ரோசியும் உடனிருந்த நிலையில் திடீரென அவரிடம் மனம் விட்டு பேசினார் மைக்கேல்.

ரோசியை தீவிரமாக காதலிப்பதாகவும், தன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா எனவும் மைக்கேல் அவரிடம் கேட்டுள்ளார்.

இதற்கு அடுத்த கணமே சம்மதம் என பதிலளித்தார் ரோசி.

ஆனால் இது நடந்த சில மணி நேரத்தில் மைக்கேல் உயிரிழந்துள்ளார்.

அதாவது புற்று நோய் இருப்பது உறுதியான ஐந்து நாட்களிலேயே மைக்கேலின் உயிர் பிரிந்தது.

ரோசி கூறுகையில், நான் மைக்கேலுடன் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் இருந்தேன்.

அப்போது அவர் பேசிய விதமே, இது தான் அவரின் கடைசி பேச்சு என்பதை எனக்கு உணர்த்தியது என சோகத்துடன் கூறியுள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்