கோரமான மனித மூளை கேக் வெட்டி மகனின் பிறந்த நாளை கொண்டாடிய தாய்!

Report Print Kabilan in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது மகனின் முதல் பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாட விரும்பி, மனித மூளை போன்ற வடிவத்தில் கேக் ஒன்றை தயார் செய்து வெட்டி கொண்டாடியுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வசித்து வருபவர் லிஸ்(30). இவருக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு அலெக்ஸாண்டர் என்று பெயர் சூட்டப்பட்டது.

ஹாலோவீன் தினத்தில் அலெக்ஸாண்டர் பிறந்ததால் அவன் பயமுறுத்துதலை விரும்புவான் என லிஸ் நினைத்தார். எனவே, தனது மகனின் பிறந்தாளை வித்தியாசமாக கொண்டாட விரும்பினார்.

எனவே தனது மகனின் Photoshoot முதல் கேக் வரை அனைத்திலும் ஹாலோவீன் தீம் இருக்க வேண்டும் என்று திட்டமிட்டார். அதன்படி கேக்கை மனித மூளை வடிவத்தில் இருக்க வேண்டும் என நினைத்த லிஸ், அதற்காக முதலில் ஸ்பாஞ் கேக் வாங்கினார்.

பின்னர் அதனுடன் க்ரீம் சீஸும் வாங்கி மனித மூளை போன்ற வடிவத்தை உருவாக்கினார். அதன் மீது ராஸ்பெர்ரி பயன்படுத்தி மூளையின் மீது ரத்தம் வழிவது போன்ற கோர தோற்றத்தை ஏற்படுத்தினார்.

ரத்தம் போன்ற பதம் வருவதற்காக ஜாம் சேர்த்துக் கொண்டார் லிஸ். ராஸ்பெர்ரி ஜூஸ் தெளித்த பிறகு கேக் மனித மூளை போன்று இருந்தது. இதற்காக லிஸ் 40 டொலர்கள் செலவழித்தார்.

அதனைத் தொடர்ந்து, அலெக்ஸாண்டரின் புகைப்படங்கள் மற்றும் மனித மூளை கேக்கை வெட்டி மகிழ்ந்த புகைப்படங்கள் என அனைத்தையும் வீடியோவாக எடுத்து, தனது நண்பர்களுக்கு அனுப்பி வைத்து பிறந்தநாள் விழாவிற்கு அழைத்துள்ளார்.

மேலும் லிஸ் தனது பேஸ்புக் பக்கத்திலும் இந்த மனித மூளை கேக்குடனான தனது மகனின் புகைப்படங்களை பகிர்ந்தார். இதற்கு ஆயிரக்கணக்கான Likes, Commets வர வைரலாக இந்த புகைப்படங்கள் பரவி வருகின்றன.

இதற்கு முன்பும் இதே போல, கடந்த 2015ஆம் ஆண்டு பிரிஸ்பேனைச் சேர்ந்த எமி லூயிஸ் என்ற பெண் தனது மகனின் பிறந்த நாளை மனித மூளை கேக் செய்து, Photoshoot மற்றும் Editing செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்